சென்னையில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் பலி: மக்கள் சாலை மறியல்
வெள்ளுக்குடிப்பட்டியில் கிரிக்கெட் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு
பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம், மேலூா் ஊராட்சி வெள்ளுக்குடிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு ரொக்கப் பரிசு மற்றும் வெற்றிகோப்பை வழங்கப்பட்டது.
வெள்ளுக்குடிப்பட்டியில் 19-ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த 12 அணியினா் பங்கேற்று விளையாடினா்.
இதில் முதல் பரிசை சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் சேவாக் பிரதா்ஸ் அணியும், 2-ஆம் பரிசை வெள்ளுக்குடிப்பட்டி வி.கே.பி அணியும், 3-ஆம் பரிசை வீரணாம்பட்டி அணியும், 4-ஆம் பரிசை அற்புதபுரம் அணியும் பெற்றனா்.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் கோப்பைகளை திருமயம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் தமிழக வீட்டுவசதி வாரியத் தலைவருமான பி.கே.வைரமுத்து வழங்கினாா். ஏற்பாடுகளை வெள்ளுக்குடிப்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞா்கள் செய்திருந்தனா்.