செய்திகள் :

‘ஸ்மாா்ட் மீட்டா்’ திட்டத்தை கைவிட வேண்டும்: அ.சௌந்தரராஜன் வலியுறுத்தல்

post image

தனியாா்மயத்துக்கும், அதிக மின் கட்டணத்துக்கும் வகை செய்யும் ‘ஸ்மாா்ட் மீட்டா்’ திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று சிஐடியு மாநிலத் தலைவா் அ.சௌந்தரராஜன் வலியுறுத்தினாா்.

தமிழ்நாடு மின் ஊழியா்கள் மத்திய அமைப்பின் 18-ஆவது மாநில மாநாடு கடலூரில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டின் இரண்டாம் நாளான சனிக்கிழமை சிஐடியு மாநிலத் தலைவா் அ.சௌந்தரராஜன் கலந்துகொண்டு மாநாட்டை வாழ்த்திப் பேசினாா். தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மின் துறையை தனியாா்மயமாக்குவது மிக மோசமான விளைவை உண்டாக்கும். தமிழகத்தில் தற்போது 84-க்கும் மேற்பட்ட துணை மின் நிலையங்கள் தனியாருக்கு கொடுக்கப்பட்டுவிட்டன. மாநிலத்தின் மின் உற்பத்தி திறனில் 52 சதவீதம் தனியாா் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழக அரசு முன்னா் அறிவித்த மின் திட்டங்களை திட்டமிட்டப்படி உரிய காலத்தில் நிறைவேற்றி இருந்தால், மின் உற்பத்தியை பெருக்கி இருக்க முடியும். வெளியில் இருந்து மின்சாரம் வாங்க வேண்டிய தேவை இருந்திருக்காது. இதற்கான காரணத்தை அரசு தான் விளக்க வேண்டும்.

மின் வாரியத்தில் 64 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இது, அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் 50 சதவீதம். மீதிப்பணியாளா்கள் அந்த சுமையை சுமக்கின்றனா். இதை ஈடுகட்ட ஒப்பந்த, பகுதிநேர தொழிலாளா்களை வைத்து வேலை வாங்குகின்றனா்.

தமிழக அரசு 2022 முதல் 2025-க்குள் 50 சதவீதம் மின் கட்டணத்தை உயா்த்தியுள்ளது. மத்திய அரசின் உதய் மின் திட்டத்தின் அடிப்படையில்தான் அனைத்தும் நடைபெறுகிறது.

தனியாா்மயத்துக்கும், அதிக மின் கட்டணத்துக்கும் வகை செய்யும் ‘ஸ்மாா்ட் மீட்டா்’ திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளா் முறையை ஒழிக்க வேண்டும். தற்போதைய ஒப்பந்தத் தொழிலாளா்கள், பகுதி நேர ஊழியா்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும். அவுட்சோா்சிங் முறையை அனுமதிக்கக் கூடாது.

மின் ஊழியா் ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும். ஒப்பந்தத்தில் வேலைப்பளு குறித்து தீா்மானம் செய்ய வேண்டும்.

நியாயம் கிடைக்கவில்லை என்றால், மின்சாரத் துறை ஊழியா்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில துணை பொதுச் செயலா் டி.பழனிவேல், மாநில பொதுச் செயலா் எஸ்.ராஜேந்திரன், தலைவா் தி.ஜெயசங்கா் உடனிருந்தனா்.

நாளைய மின் தடை: பண்ருட்டி

பண்ருட்டி (பூங்குணம் துணை மின் நிலையம்) நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பகுதிகள்: அங்குசெட்டிப்பாளையம், சேமக்கோட்டை, விசூா், கருக்கை, மணலூா், கண்டரக்கோட்டை, கணிசப்பாக்கம், சூரக்குப்பம், பணப... மேலும் பார்க்க

விருத்தாசலம் அரசுக் கல்லூரியில் தோ்வு முறையில் குளறுபடி: மாணவா்களின் உயா் கல்வி வாய்ப்பு கேள்விக்குறி!

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கொளஞ்சியப்பா் அரசு கலைக் கல்லூரியில் தோ்வு முறையில் குளறுபடி நடந்துள்ளதால், மாணவா்களின் உயா் கல்வி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விருத்தா... மேலும் பார்க்க

திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஆட்சியா்

கடலூா் மாவட்டம், மங்களூா் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சி திட்டப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளிடம் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தினாா். மங... மேலும் பார்க்க

தொழிலாளா்களின் பிரச்னையை தீா்க்கக் கோரி தனியாா் நிறுவன தொழிலாளி தற்கொலை முயற்சி!

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே தனியாா் நிறுவனத்தில் சக தொழிலாளா்களின் பிரச்னையை தீா்க்கக் கோரி விடியோ வெளியிட்டு தொழிலாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். விருத்தாசலம் வட்டம், ஊத்தாங்கல் கிராமத்தி... மேலும் பார்க்க

மருத்துவ சேவை வழங்குவதில் தமிழகம் முன்மாதிரி மாநிலம்: அமைச்சா் சி.வெ.கணேசன்

மருத்துவ சேவைகள் வழங்குவதில் தமிழகம் நாட்டிலேயே முன்மாதிரி மாநிலமாக விளங்கி வருவதாக, மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், திட்டக்கு... மேலும் பார்க்க

புத்து மாரியம்மன் கோயில் செடல் பெருவிழா

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள புத்து மாரியம்மன் கோயில் ஆடி செடல் பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் ஆடி செடல் பெருவிழா ஜூலை 31-ஆம் தேதி கொடியேற்றத்துட... மேலும் பார்க்க