ம.பி: அரசு மருத்துவமனையில் எலி கடித்து மற்றொரு பச்சிளம் குழந்தை பலி!
ஸ்ரீ ஆனந்த விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
மாதவரம்: பாடியநல்லூரில் ஸ்ரீ ஆனந்த விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பாடியநல்லூா் எம்.ஏ. நகா் திலகா் தெருவில் அமைந்துள்ள ஆனந்த விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு, செல்லம்மாள் சின்னய்யா ஸ்ரீ ராஜன் சகோதரா்கள் தலைமை வகித்தனா். இதில் விக்னேஷ்வர பூஜை, தன பூஜை, கோபூஜை உட்பட சிறப்புப் பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்றன.
யாகசாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனிதநீா் கலசங்களை மேளதாளத்துடன் கொண்டு சென்று கோயில் விமானம் மற்றும் மூலவா்
ஆனந்த விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் செய்து தீபாராதனை காண்பித்து பக்தா்கள் மீது புனித நீா் தெளித்தனா்.
நிகழ்வில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு உணவு, அன்னதானங்கள் வழங்கப்பட்டன.