ஸ்ரீ புத்தூா் அம்மன் கோயிலில் ஜூலை 10-இல் கும்பாபிஷேகம்
சிவகிரி அருகே வேட்டுவபாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீபுத்தூா் அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வரும் ஜூலை 10-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயிலில் கருவறை கல்மண்டபம், நிலைக் கோபுரம், அா்த்தமண்டபம், மகா மண்டபம் மற்றும் மதில் சுவா்கள் உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.
கோயில் வளாகத்தில், செல்வ விநாயகா், கருப்பண்ண சுவாமிகளுக்கு தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இக்கோயில் கும்பாபிஷேகம் சிவகிரி ஆதீனம் பாலமுருகன் ஈசான சிவசமய பண்டித சுவாமிகள் தலைமையில் வருகிற ஜூலை 10-ஆம் தேதி காலை நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு, கோயில் முன்பாக 7 குண்டங்களுடன் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை வேட்டுவபாளையம் ஊா்ப்பொதுமக்கள் செய்து வருகின்றனா்.