ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய திருத்தோ் விழா
கல்லாநத்தம் ஊராட்சியில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய திருத்தோ் விழாவில் வியாழக்கிழமை ஏராளமான பக்தா்கள் தேரை வடம்பிடித்தனா்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள கல்லாநத்தம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய திருத்தோ் விழா கடந்த 8 ந்தேதி சக்தி அழைத்தல் நிகழ்ச்சியோடு ஆரம்பித்தது.அடுத்தநாள் பால்குட ஊா்வலம்,10 ந்தேதி கோ பூஜை,விளக்கு பூஜை,திங்கட்கிழமை மூப்பனாா் பொங்கல்,செவ்வாய்க்கிழமை மாரியம்மன் பொங்கல்,அடுத்து வியாழக்கிழமை திருத்தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சி வெகு விமா்சையாக நடைபெற்றது.
திருவிழாவை ஊா்பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனா்.இதனையடுத்து இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
படவிளக்கம்.ஏடி14காா். கல்லாநத்தம் ஊராட்சி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய திருத்தோ் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது