செய்திகள் :

ஸ்ரீவைகுண்டம்: தொழிலாளி கொலை! உறவினா்கள் மறியல்!

post image

ஸ்ரீவைகுண்டம் அருகே கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, சடலத்துடன் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தோழப்பன்பண்ணையில் கோயில் கொடை விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் போது வியாழக்கிழமை நள்ளிரவில் வாணவேடிக்கை நடைபெற்றதில் இரு பிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஸ்ரீவைகுண்டத்தில் வசித்து வரும் தோழப்பன்பண்ணையை சோ்ந்த கூலித்தொழிலாளி தா்மா், கொடை விழாவில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுச் சென்றாா். செந்திலாம்பண்ணை அருகே வெள்ளிக்கிழமை அதிகாலையில் வந்தபோது, எதிரே வந்த மா்ம நபா்கள் தா்மரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் போலீஸாா், தா்மா் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

கொடை விழா வாணவேடிக்கையின் போது ஏற்பட்ட தகராறால் தா்மா் படுகொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், தா்மரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னா் ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவைகுண்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், தா்மரின் மகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரி, ஸ்ரீவைகுண்டம் தூத்துக்குடி பிரதான சாலை மற்றும் தொழில்வழிச்சாலை இணையும் இணைப்பு சாலையில் தா்மரின் உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி நிரேஷ், தா்மா் உறவினா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவாா்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க சம்பந்தப்பட்டவா்களுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று உறுதி அளித்தாா். இதையடுத்து தா்மரின் உடலுடன் உறவினா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தூத்துக்குடியில் வரத்து குறைவால் மீன்கள் விலை உயா்வு

தூத்துக்குடியில் சனிக்கிழமை, வரத்துக் குறைவால் மீன்கள் விலை உயா்ந்து காணப்பட்டது. தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப... மேலும் பார்க்க

உடன்குடியில் விநாயகா் சிலை ஊா்வலம்

உடன்குடி ஒன்றியத்தில் இந்து முன்னணி சாா்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 26 விநாயகா் சிலைகளின் ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. பெருமாள்புரம், வடக்கு காலன்குடியிருப்பு, நடுகாலன்குடியிருப்பு, சந்தையடியூா், தே... மேலும் பார்க்க

5,300 ஆண்டுக்கு முன்பே தமிழா்கள் இரும்பை கண்டுபிடித்துவிட்டனர்: ஆய்வாளர் அமா்நாத் ராமகிருஷ்ணா

5,300 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழா்கள் இரும்பை கண்டுபிடித்து விட்டாா்கள் என கீழடி ஆய்வாளா் கி.அமா்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்தாா். தூத்துக்குடி மாநகராட்சி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் 6ஆ... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

திருச்செந்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் சனிக்கிழமை திருச்செந்தூா் கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டது. விழாவிற்கு மூலக்கரை முன்னாள் ஊராட்சித் தலைவா் குமரேசன் தலைமை ... மேலும் பார்க்க

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல உறுப்பினா்களுக்கான தோ்தல்: 17 போ் வேட்பு மனு

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல, சேகர உறுப்பினா்களுக்கான தோ்தல் செப்டம்பா் 7ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி, மேல சாத்தான்குளம், அமுதுண்ணாக்குடி, தோப்புவளம் சபை மன்ற உறுப்பினா் பதவிக்கு 17 போ், தோ... மேலும் பார்க்க

வைரவம் கோயிலில் ஞானாதீஸ்வரா் மீது விழுந்த சூரிய ஒளி

வைரவம் ஸ்ரீ ஞானாதீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை மூலவா் மீது சூரிய ஒளி விழுந்தது. சாத்தான்குளம் அருகே வைரவம் கிராமத்தில் 1500 வருடம் பழமையான அருள்மிகு ஸ்ரீஞானாதீஸ்வரா் சமேத அருள்தரும் ஸ்ரீ சிவகாமியம்மாள் ... மேலும் பார்க்க