ஹாக்கி இந்தியா விருதுகள்: சிறந்த ஹாக்கி குழு விருதைப் பெற்ற தமிழ்நாடு!
இந்திய அளவில் சிறந்த ஹாக்கி குழுவாக தமிழ்நாடு ஹாக்கி குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ஹாக்கி விளையாட்டுக்கான தேசிய கூட்டமைப்பு ’ஹாக்கி இந்தியா’ என்ற பெயரில் 1925-ஆம் ஆண்டு நவம்பர் 7 நிறுவப்பட்டது.
இந்த நிலையில், ஹாக்கி இந்தியாவின் வருடாந்திர விருது வழங்கும் விழா 7-ஆவது ஆண்டாக வெள்ளி, சனி (மார்ச் 14, 15) ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது. அதில், பல்வேறு பிரிவுகளில் கடந்த 2024-ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
ஹாக்கி விளையாட்டில் இந்தியா அடியெடுத்து வைத்து 100 ஆண்டுகள்(1925 - 2025) நிறைவடைவதையொட்டி, நிகழாண்டு இவ்விழா கூடுதல் சிறப்பும் கவனமும் பெற்றிருக்கிறது.


இந்த நிலையில், 2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரராக ஹர்மன்ப்ரீத் சிங், கோல் கீப்பராக பி.ஆர். ஸ்ரீஜேஷ், சிறந்த வீராங்கனையாக தீபிகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அளவில் சிறந்த ஹாக்கி குழுவாக தமிழ்நாடு ஹாக்கி குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
