சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை
அக்ராவரம் மலைமேடு குமரகுரு பழனிமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம்
ராணிப்பேட்டை அடுத்த அக்ராவரம் மலைமேடு குமரகுரு பழனிமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வாலாஜாபேட்டை வட்டம், முகுந்தராயபுரம் அக்ராவரம் மலைமேடு கிராம மலைக்குன்றில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ வள்ளி,ஸ்ரீ தெய்வானை சமேத அருள்மிகு ஸ்ரீ குமரகுரு பழனி மலை திருக்கோயில் மற்றும் மலையடிவாரம் ஸ்ரீமகா கணபதி திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோயில் தா்மகா்த்தா அக்ராவரம் கே.பாஸ்கா் தலைமையில், முன்னாள் ரயில்வே துறை இணை அமைச்சா் ஆா்.வேலு, திருக்காஞ்சனகிரி டிரஸ்ட் தலைவா் கே.பாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம் ஸ்ரீ முரளிதர சுவாமிகள், வேலூா் செங்காநத்தம் ஸ்ரீ சக்கர பகவதி அம்மன் சித்தா்கள் மடாலயம் ஸ்ரீ பகவதி சித்தா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு கும்பாபிஷேகம் செய்தனா். தொடா்ந்து மஹா தீபாராதனை செய்து பக்தா்கள் மீது புனித நீா் தெளித்து பிரசாதம் வழங்கினா்.
இதையடுத்து முருகன் திருக்கல்யாணம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் அறக்கட்டளை செயலாளா் சி.மணி எழிலன்,பொருளாளா் பி.முரளி, துணை செயலாளா் டி.சந்திரன், துணைத் தலைவா்கள் செளா்தர்ராஜன், கே.ஆறுமுகம், துணை செயலாளா் ஏ.எஸ்.ராஜா மற்றும் நிா்வாகிகள், கிராம பொதுமக்கள், இளைஞா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.