செய்திகள் :

அசோக் லேலண்டின் நிகர லாபம் புதிய உச்சம்

post image

ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட், கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டிலும் அந்த நிதியாண்டு முழுமையிலும் அதிகபட்ச நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

204-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 38.4 சதவீதம் அதிகரித்து ரூ.1,246 கோடியாக உள்ளது. இது முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.900 கோடியாக இருந்தது.

கடந்த மாா்ச் 31-இல் முடிவடைந்த நிதியாண்டு முழுமைக்கும் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.3,303 கோடியாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது 26 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.2,618 கோடியாக இருந்தது.

கடந்த நிதியாண்டிலும், அந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டிலும் பதிவான நிகர லாபங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டதில் அதிகபட்சம் ஆகும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்: ரூ.920 கோடியில் வித்லாபூர் ஆலையை விரிவாக்கும் ஹோண்டா!

ஆமதாபாத்: குஜராத் மாநிலம் வித்லாபூரில் இயங்கி வரும் உற்பத்தி ஆலையை ரூ.920 கோடியில் விரிவாக்கம் செய்து, நான்காவது உற்பத்தி மையத்தை உருவாக்கவிருப்பதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா ந... மேலும் பார்க்க

ஜிஎன்எஃப்சி நிறுவனத்தின் 4-வது காலாண்டு லாபம் 62% உயர்வு!

புதுதில்லி: குஜராத் நர்மதா வேலி ஃபெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட், மார்ச் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 62 சதவிகிதம் அதிகரித்து ரூ.211 கோடியாக உள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.கடந்த ஆண்... மேலும் பார்க்க

ரூபாய் மதிப்பு 70 காசுகள் உயர்ந்து ரூ.85.25-ஆக முடிவு!

மும்பை: தொடர்ந்து அந்நிய நிதி வரவு, பலவீனமான அமெரிக்க டாலர் மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு ஆகிய காரணங்களால், இன்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாய் மதிப்பு நவம்பர் 2022க்குப் பிறகு ஒரே நாளி... மேலும் பார்க்க

சென்செக்ஸ் 760 புள்ளிகளுக்கு மேல் உயர்வு; எஃப்எம்சிஜி, பவர் பங்குகள் ஏற்றம்!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கிட்டத்தட்ட 1 சதவிகிதம் உயர்ந்து முடிந்தன. டாப் நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐடிசி ந... மேலும் பார்க்க

ஏற்றத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்ந்தது!

நேற்று சரிவைச் சந்தித்த பங்குச்சந்தை இன்று(மே 23) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 80,897 என்ற புள்ளிகளில் தொடங்கியது.காலை 11.50 மணியளவில், செ... மேலும் பார்க்க

பங்குச் சந்தை ஏற்றத்துடன் தொடக்கம்!

இந்திய பங்குச் சந்தை வாரத்தின் கடைசி நாளான இன்று(வெள்ளிக்கிழமை) காலை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 9.30 மணி நிலவரப்படி, 411 புள்ளி... மேலும் பார்க்க