செய்திகள் :

அஜித்குமார் கொலை: போராட்டத்துக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் தவெக மனு!

post image

அஜித்குமார் கொலை வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தினர் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்காததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் அண்மையில் அடித்துக் கொல்லப்பட்டாா். இந்த விவகாரத்தில் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு மாற்றக் கோரியும் தவெக தரப்பில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த போராட்டத்துக்கு காவல்துறையினரிடம் தவெகவினர் அனுமதி கோரிய நிலையில், இரண்டு முறை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வருகின்ற ஜூலை 6 ஆம் தேதி போராட்டம் நடத்துவதற்கு காவல்துறையினரை அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தவெக தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Tamilaga Vetri kazhagam has filed a petition in the Madras High Court after the police did not grant permission to hold a protest in the Ajith Kumar murder case.

இதையும் படிக்க : பிரமோஸ் ஏவுகணைக்கு எதிர்வினையாற்ற நேரம் கிடைக்கவில்லை: பாக். பிரதமரின் ஆலோசகர்!

உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியற்ற திமுக ஐ.டி. பிரிவு பணியாளர்கள்: இபிஎஸ் கண்டனம்

உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியற்ற திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு பணியாளர்களை நியமிக்க முயல்வதாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வி... மேலும் பார்க்க

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கிராம சாலைகள் அமைக்கப்படவில்லை: அண்ணாமலை

தமிழகத்தில் இன்னும் பல மாவட்டங்களில் கிராம சாலைகள் அமைக்கப்படவில்லை என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அரு... மேலும் பார்க்க

வேளச்சேரி ரயில் நிலையத்தில் உள் விளையாட்டு அரங்கம்! - தெற்கு ரயில்வே

சென்னை வேளச்சேரி புறநகர் ரயில் நிலையத்தில் உள்ளரங்கு விளையாட்டுத் திடல் அமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. புறநகர் ரயில்கள் செல்லும் சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்தில் இறகுப் பந்து, ஜிம்னாஸ்டிக... மேலும் பார்க்க

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிப் படுகொலை!

மயிலாடுதுறையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி மணிமாறன், மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகியும், காரைக்கால் மாவட்டச் செயலாளருமான மணிமாறன் என்பவர், மயிலாட... மேலும் பார்க்க

பொங்கல் முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்படும்

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, வரும் பொங்கல் பண்டிகை முதல் மதுரை தோப்பூர் வளாகத்திலேயே செயல்படும் என்று அதன் நிர்வாக அதிகாரி அனுமந்தராவ் தெரிவித்துள்ளார்.மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பயில ச... மேலும் பார்க்க

ஜூலை 7ல் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்!

வருகிற ஜூலை 7 ஆம் தேதி சுபமுகூர்த்த நாள் என்பதால் தமிழகத்தில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று பத்திரப்பதிவுத் துறை அறிவித்துள்ளது. சுபமுகூர்த்த நாள்களில் அதி... மேலும் பார்க்க