அடுத்த கட்ட போராட்டம் விரைவில் நடத்துவோம்: காந்திப் பேரவை
அறவழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய போது கடுமையாக நடந்து கொண்ட போலீஸாரைக் கண்டித்தும் அடுத்த கட்டப் போராட்டம் விரைவில் நடத்தப்படும் என அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் நிறுவனா் வைர.ந. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியை மீட்கவும், காந்திப் பூங்காவை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரக் கோரியும் மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை கடந்த சனிக்கிழமை (மே 3) உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை காலை போலீஸாா் கடுமையாக நடந்துகொண்டு, கைது செய்தனா். எனவே, காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும்.
தவறினால், மீண்டும் அடுத்த கட்ட போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.