கோடை விடுமுறை: கோவை - உதகை இடையே சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
அட்சய திருதியை: தமிழ்நாட்டில் ரூ.272.32 கோடி வருவாய் ஈட்டிய பதிவுத்துறை!
சென்னை : புதன்கிழமை அட்சய திருதியை நாள் என்பதால், ஏராளமானோர் சொத்துகள் வாங்கியதன் மூலம், தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் ரூ.272.32 கோடி வருவாயை பதிவுத்துறை ஈட்டியிருக்கிறது.
சொத்துகள் வாங்க - விற்க அதிகமானோர் சார் பதிவாளர் அலுவலகங்களில் குவிவார்கள் என்பதால், நேற்று வழக்கத்தை விட அதிகமான டோக்கன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில்தான், அட்சய திருதியை நாளான நேற்று, ஒரே நாளில் 27,440 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டன. இதுபோன்று கடந்த அட்சய திருதியை நாள்களிலும் அதிகமான வருவாய் ஈட்டப்பட்டிருந்தாலும் இது புதிய சாதனை என்று கூறப்படுகிறது.
அதாவது, ஒரு நாள் வருவாய் வசூலில் இதுவரை இல்லாத அளவில் அதிக வசூல் செய்து பதிவுத்துறை புதிய சாதனை படைத்திருப்பதாக அமைச்சர் மூர்த்தி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்.10ஆம் தேதி முகூர்த்த நாள் என்பதால் தமிழ்நாடு முழுவதும் 23,421 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு பதிவுத் துறை ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.