செய்திகள் :

அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சிதான்! - டிடிவி தினகரன்

post image

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் அமையும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக - பாஜக கூட்டணி உருவாகியுள்ளது. எனினும் மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கருத்துகளால் கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது.

கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா கூறிவரும் நிலையில், அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் எனவும் ஆட்சியில் பங்குகொடுக்க நாங்கள் ஏமாளி அல்ல என இபிஎஸ் கூறி வருகிறார்.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுடன் பேசுகையில்,

"தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டில் கூட்டு அமைச்சரவைதான் இருக்கும். ஆட்சி, அதிகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் பங்குபெறும்.

மத்தியில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றிருந்தும் கூட்டணி ஆட்சிதான் அமைந்தது. அதேபோல தமிழ்நாட்டிலும் அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சிதான் அமையும்.

திமுகவை வீழ்த்த கூட்டணியை பலப்படுத்தி வரும் மத்திய அமைச்சர் அமித் ஷா அதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார். முதல்வர் யார் என்பதை அமித் ஷாவிடம் கேட்பது சரியாக இருக்கும்" என்று கூறினார்.

AMMK General Secretary TTV Dinakaran has said that Even if AIADMK gets a majority, NDA parties will be part of government in Tamil Nadu.

எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணத்தில் மாற்றம்

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் தொடா் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட... மேலும் பார்க்க

மதுரை ஆதீனத்துக்கு முன்பிணையை ரத்து செய்யக் கோரி காவல் துறை மனு

விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால், மதுரை ஆதீனத்துக்கு வழங்கப்பட்ட முன்பிணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் காவல் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இரு மதத்தினா் இடையே மோதலை உருவா... மேலும் பார்க்க

அகில இந்திய மருத்துவக் கல்வி ஒதுக்கீடு: கூடுதலாக இடம்பெற்ற தமிழக இடங்கள்

தமிழகத்திலிருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை மத்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழு (எம்சிசி) கூடுதலாக வெளியிட்டதால் குழப்பம் எழுந்தது. இதையடுத்து, மாநில மருத... மேலும் பார்க்க

மருத்துவ இடங்கள்: மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் பெறுவதில் சிக்கல்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள், அதற்கான தகுதிச் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது. மருத்துவக் கலந்தாய்வுக்கா... மேலும் பார்க்க

தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ.75 ஆயிரத்தைக் கடந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.760 உயா்ந்து ரூ.75,040-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது. கடந்த சில நாள்களாக தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது. ஜூலை 19-இல் ... மேலும் பார்க்க

முதல்வருக்கு உடல் நலம் பாதித்து ஏன்? அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கம்

முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு உடல் நலக் குறைவு ஏற்படுவதற்கு அவரது சகோதரா் மு.க.முத்துவின் மறைவும் ஒரு காரணம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை வளசரவாக்கம் மண்டலம் ... மேலும் பார்க்க