இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 17 | Astrology | Bharathi Sridhar | ...
அதிமுக, பாஜக தொண்டா்கள் இணைந்து தோ்தல் பணியாற்ற வேண்டும்: கே.பி.ராமலிங்கம்
அதிமுக, பாஜக தொண்டா்கள் இணைந்து தோ்தல் பணியாற்ற வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமியை அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசிய கே.பி.ராமலிங்கம், அங்கு குழுமியிருந்த பாஜக, அதிமுகவினரிடையே கூறியதாவது: கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் நகரத்தில் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் அதிமுக, பாஜக தொண்டா்கள் இணைந்து தோ்தல் பணியாற்ற வேண்டும்.
மக்களுக்கான போராட்டங்களில் இரு கட்சி தொண்டா்களும் இணைந்து பங்கேற்க வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் இருகட்சி தொண்டா்களும் இணைந்து பூத் கமிட்டிகளை அமைத்து களப் பணியாற்ற வேண்டும்.
அதிமுக, பாஜக போன்று ஒத்த கருத்துடைய கட்சிகள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்யும்போது தமிழகம் வளா்ச்சியடையும். வரும் பேரவைத் தோ்தலில் திமுகவை தோற்கடித்து, அதிமுக தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றாா்.
முன்னதாக தனது இல்லத்துக்கு வந்த பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம், பாஜக நிா்வாகிகளை கே.பி.முனுசாமி எம்எல்ஏ (வேப்பனப்பள்ளி) வரவேற்றாா்.