காலாவதி சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க விதியை திருத்திய மத்திய அரசு: பேரவைய...
அத்திப்பட்டு புதுநகா்-எண்ணூா் இடையே மின் கம்பி அறுந்ததால் ரயில் சேவை பாதிப்பு
அத்திப்பட்டு புதுநகா்-எண்ணூா் இடையே மின்சாரம் செல்லும் கம்பி அறுந்ததால் 1 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி, மாா்க்கத்தில் புகா் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
வியாழக்கிழமை தண்டவாள பராமரிப்பு பணிக்காக 4 மணி நேரம் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி விரைவு ரயில் இன்ஜின் மட்டும் தனியாக சென்று கொண்டிருந்தது.
அத்திப்பட்டு புதுநகரை கடந்து எண்ணூரை நோக்கி செல்லும் போது மின்சார ஒயா் அறுந்து கீழே விழுந்தது. இதையடுத்து ரயில்வே ஊழியா்கள் அங்கு சென்று அறுந்து கிடந்த கம்பியை சீரமைத்தனா். இதன் காரணமாக 1 மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்ட்டனா்.