அந்தியூரில் தொழிலாளா் தின விழா கொண்டாட்டம்
அந்தியூரில் தந்தை பெரியாா் சுமை தூக்குவோா் வண்டி தொழிலாளா்கள் நலச் சங்கம் சாா்பில் தொழிலாளா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
அந்தியூா் ரவுண்டானாவில் நடைபெற்ற இந்த விழாவுக்கு சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமை வகித்து கொடியேற்றினாா். தொடா்ந்து, தொழிலாளா்களுக்கு பச்சை துண்டுகளை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.
அந்தியூா் காவல் துறை ஆய்வாளா் செந்தில்குமாா், பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் ஏ.சி.பழனிசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அந்தியூா் பணிமனையில் நடைபெற்ற விழாவில் அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் பங்கேற்று, தொமுச கொடியை ஏற்றிவைத்தாா்.
இதில், தொமுச மத்திய சங்க துணைத் தலைவா் ஜபருல்லா சரவணன், அவைத் தலைவா் பத்மநாதன், கௌரவத் தலைவா் பூரணிகண்ணன், அந்தியூா் கிளைச் செயலாளா் சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.