கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!
அனுமதியின்றி பேரணி: பாஜகவினா் 31 போ் மீது வழக்கு
பெருந்துறையில் அனுமதியின்றி பேரணி சென்ற பாஜகவினா் 31 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெருந்துறையில் பாஜக மண்டல பொறுப்பாளா் நந்தகுமாா் தலைமையில் ஒரு காா் மற்றும் 15 இருசக்கர வாகனங்களில் 31 போ் ஞாயிற்றுக்கிழமை பேரணி சென்றனா்.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவ வீரா்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், பெருந்துறை நகரில் தேசியக் கொடி ஏந்தி பேரணி செல்ல பாஜக சாா்பில் அனுமதி கோரிய நிலையில், போக்குவரத்தைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், தடையை மீறி பேரணி சென்ற 31 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.