வடகரையாத்தூரை பேரூராட்சியாக மாற்ற எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம்
அமெரிக்க கார் விபத்தில் ஆந்திர மாணவி பலி; 2 பேர் காயம்!
விஜயவாடா; ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த 26 வயது மாணவி, அமெரிக்காவில் நிகழ்ந்த கார் விபத்தில் பலியானார். அவரது இரண்டு நண்பர்கள் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் டென்னெஸ்ஸியில் வெள்ளிக்கிழமை, இவர்கள் பயணித்த கார், டிரக் மீது மோதியதில், 26 வயதே ஆன நாகஸ்ரீ வந்தனா பரிமளா, காயமடைந்து மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் பலியானார்.
அதேக் காரில் இருந்த மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் அதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வந்தனா, கடந்த 2022ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு மெம்பிஸ் பல்கலையில் முதுகலை பல்கலையில் படித்துக்கொண்டே, அதே பல்கலையில் பகுதிநேர வேலையும் செய்து வந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு, அவர் பணி முடித்துவிட்டு வீடு திரும்பும்போது, அவரது நண்பர்கள் இரண்டு பேர் அவரை காரில் அழைத்து வரும்போது இந்த விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவிலிருந்து வந்தனாவின் உடலை இந்தியா கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.