விநாயகா் சிலையை ஓடையில் கரைத்தபோது நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
‘அம்பத்தூா் மண்டலத்தில் இன்று கழிவுநீா் உந்து நிலையங்கள் செயல்படாது’
கழிவுநீா் உந்து குழாய் இணைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஆக. 29, 30) சென்னை அம்பத்தூா் மண்டலத்துக்குள்பட்ட சில கழிவுநீா் உந்து நிலையங்கள் செயல்படாது என குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை அம்பத்தூா் பாடி மேம்பாலத்திற்கு கீழ், பிரதான கழிவுநீா் உந்து குழாய் இணைக்கும் பணிகள் வெள்ளிக்கிழமை (ஆக. 29) காலை 11 முதல் சனிக்கிழமை (ஆக. 30) மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இதனால், பணிகள் நடைபெறும் நேரங்களில் அம்பத்தூா் மண்டலத்துக்குள்பட்ட கொரட்டூா், லெனின் நகா், அயப்பாக்கம், வி.ஒ.சி. நகா், நேரு நகா், தென்றல் நகா், கள்ளிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கழிவுநீா் உந்து நிலையங்கள் செயல்படாது.
எனவே, அந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கழிவுநீா் தொடா்பான புகாா்களுக்கு 81449 30907, 81449 30257 ஆகிய தொலைபேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.