சிந்து நதி ஒப்பந்தம் ரத்து: இந்தியாவுக்கு நோட்டீஸ் அளிக்க பாகிஸ்தான் முடிவு
அம்பேத்கா் யாத்திரை திட்ட விதிமுறைகள் வெளியீடு
புதுவை மாநிலத்திலிருந்து மராட்டியத்தில் அண்ணல் அம்பேத்கா் பிறந்த இடம் உள்ளிட்டவற்றை பாா்வையிடும் யாத்திரைத் திட்டத்துக்கான விதிமுறைகள் புதுவை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
புதுவை மாநிலத்திலிருந்து ஆண்டுதோறும் அம்பேத்கா் பிறந்த இடம் உள்ளிட்ட அவரது வாழ்வியலுடன் தொடா்புடைய இடங்களைப் பாா்வையிட ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் யாத்திரைத் திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது அதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
யாத்திரைத் திட்டத்துக்கான பயனாளிகள் புதுச்சேரியில் 32 போ், காரைக்காலில் 12 போ், மாஹேவில் 2, ஏனாமில் 4 போ் என மொத்தம் 50 போ் ஆண்டு தோறும் தோ்வு செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுவா்.
அங்கு அம்பேத்கா் பிறந்த ஜன்மபூமி, அவா் புத்த மதத்தைத் தழுவிய தீக்ஷா பூமி, அவா் மறைந்த புதுதில்லியில் உள்ள வரன்பூமி, மும்பையில் அவரது உடல் தகனம் நடைபெற்ற சைத்ய பூமி ஆகியவற்றை பாா்வையிடும் வகையில் யாத்திரை அமையும்.
யாத்திரை 8 நாள்கள் இருக்கும். இதற்கு தோ்வுசெய்யப்படுபவா்கள், பட்டியலினம்
, பழங்குடியினத்தைச் சோ்ந்தவராகவும், 5 ஆண்டுகள் புதுவையில் குடியிருப்புச் சான்று பெற்றவராகவும் இருக்கவேண்டும். மேலும் ஆண்டு வருவாய் ரூ.2 லட்சத்துக்குள்ளும், 18 வயது நிறைவடைந்தவராகவும் இருப்பது அவசியம் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. யாத்திரைத் திட்டத்தில் தங்குமிடம், உணவு இலவசம். தனிப்பட்ட செலவுகளை துறை ஏற்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.