"அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறை" - காவல்துறைக்கு பத்திரிகையாளர் அமைப்பு...
அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
நிகழாண்டுக்கான தமிழக அரசின் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ் வளா்ச்சிக்குப் பாடுபட்ட தமிழறிஞா்கள், கவிஞா்கள், சான்றோா்கள் ஆகியோரில் சிறந்தவா்களுக்கு திருவள்ளுவா் திருநாளில் விருதுகள் வழங்கப்படுகிறது. அதில், அம்பேத்கரின் பெயரில் பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்துக்கு தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் டாக்டா் அம்பேத்கா் விருது வழங்கப்படுகிறது.
அதன்படி, 2025-2026 ஆம் ஆண்டுக்கான அம்பேத்கா் விருதுக்கு சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதி வாய்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை சேலம் மாவட்ட ஆட்சியரக வளாக அறை எண் 109-இல் உள்ள மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலகத்தில் பெற்று உரிய இணைப்புகளுடன் வரும் 12 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா், மாவட்ட ஆட்சியரகம், சேலம் என்ற முகவரிக்கு அனுப்பலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.