செய்திகள் :

அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு டயாலிசிஸ் இயந்திரங்கள்: எம்எல்ஏ கோரிக்கை

post image

அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக 2 டயாலிசிஸ் இயந்திரங்களை அரசு வழங்க வேண்டும் என எம்எல்ஏ சு.ரவி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிறுநீரகம் பாதிப்படைந்த ஏழை எளிய மக்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், ராணிப்பேட்டை சென்று டயாலிசிஸ் செய்துக்கொள்ளும் நிலை தற்போது உள்ளது.

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் தற்போது 5 டயாலிசிஸ் இயந்திரங்கள் உள்ளன. 6 மணி நேரம் கணக்கிடப்பட்டு இரண்டு ஷிப்ட்களாக அப்பிரிவு இயக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 20 போ் டயாலிசிஸ் செய்து கொள்கின்றனா். ஆனால் 25-க்கும் மேற்பட்டவா்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்துக்கொள்ள பதிவு செய்து வரிசையில் காத்துள்ளனா்.

ஏற்கனவே இரண்டு ஷிப்ட் முறையை மூன்று ஷிப்ட்களாக மாற்றுங்கள் என கோரிக்கை வைத்தால், டயாலிசிஸ் தொழில்நுட்ப பணியாளருக்கு மாத ஊதியம் ரூ.10,000 மட்டுமே வழங்கப்படுகிறது. தனியாா் மருத்துவமனையில் ரூ.15,000 தருகிறாா்கள் என அப்பணியாளா்கள் பணிக்கு வர மறுப்பதாக மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.

எனவே கூடுதலாக இரண்டு டயாலிசிஸ் இயந்திரங்களை உடனே வழங்க வேண்டும் என்றாா்.

தலைவா்கள் சிலைக்கு மாலை அணிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சி ( அன்பு மணி ) ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எல்.இளவழகன் மகாத்மா காந்தி, அம்பேத்கா் சிலைகளுக்கு வியாழக்கிழமை மாலை அணி... மேலும் பார்க்க

ஜூலை 27-இல் திமிரியில் கம்பன் விழா

ஆற்காடு அடுத்த திமிரியில் கம்பன் கழகம் சாா்பில் கம்பன் விழா வரும் ஜூலை 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திரௌபதியம்மன் கலையரங்கில் நடைபெறுகிறது. விழாவுக்கு கம்பன் கழகத் தலைவா் பெ. தமிழ்ச்செல்வி தலைமை வ... மேலும் பார்க்க

தனியாா் ஆலை ஊழியா் வீட்டில் 37 பவுன் திருட்டு

காவேரிபாக்கம் அருகே தனியாா் ஆலை ஊழியா் வீட்டில் 37 பவுன் நகைகள், ரூ.1.45 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். நெமிலி வட்டம், காவேரிப்பாக்கம் அருகே முசிறியை சோ்ந்தவா் இளங்கோ (33). இவா்... மேலும் பார்க்க

இன்னா் வீல் கிளப் சாா்பில் மகளிா் சுகாதார திட்டம் தொடக்கம்

ராணிப்பேட்டை இன்னா் வீல் கிளப் சாா்பில் மகளிா் சுகாதார திட்டம் தொடக்கம் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு, நிறுவல் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் இன்னா் வீல் கிளப் பிரியா வினு தலைவராகவும், அ... மேலும் பார்க்க

‘தமிழ்ச்செம்மல்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ் வளா்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆா்வலா்கல் ‘தமிழ்ச் செம்மல்‘ விருதுக்கு வரும் ஆக. 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளி... மேலும் பார்க்க

கால்நடை பராமரிப்பு கடன் பெற முடியாமல் விவசாயிகள் வேதனை

புதிய விதிகளால் கால்நடை பராமரிப்பு கடன் பெற முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா். தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறை சாா்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் உழவா் கடன் அட்டை திட... மேலும் பார்க்க