செய்திகள் :

அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள்: தற்போதைய நிலையே தொடரலாம்

post image

அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்குச் சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மத அமைப்புகள், சங்கங்களின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி நிஷாபானு தலைமையிலான அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் சார்பில் இந்த வழக்கில் தங்களையும் இணைத்து விசாரிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு:

கருத்து சுதந்திரத்தின்படி, அரசியல் கட்சிகள் தங்களின் அடையாளங்களை வெளிப்படுத்த உரிமை உள்ளது. அடையாளங்களை பொது வெளியில் காட்சிப்படுத்த தடை விதிப்பது அதன் நோக்கத்தை சீர்குலைத்துவிடும். சொந்த இடங்களில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் வைக்க அதிகாரிகளின் அனுமதி பெற வேண்டும் என்பதை ஏற்க முடியாது. அரசியல் கட்சிகளிடம் விளக்கம் கேட்காமல் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், கடந்த ஜூலை 18-ஆம் தேதிக்குள் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என அவர் கோரியிருந்தார்.

இந்த மேல்முறையீட்டு மனுவை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு, தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தது.

இதன்படி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், செüந்தர், விஜயகுமார் அடங்கிய முழு அமர்வு, கொடிக் கம்பங்களை அகற்றுவது குறித்த வழக்கை விசாரிக்கும் என அப்போதைய தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் கடந்த வாரம் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், செüந்தர், விஜயகுமார் அடங்கிய முழு அமர்வு பிறப்பித்த உத்தரவு:

அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்றும் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன?. சாலைகளில் உள்ள கொடிக் கம்பங்களால் இடையூறு எனில் சாலைகளில் நிறுவப்பட்டுள்ள சிலைகளும் இடையூறுதானே. அவற்றை ஏன் அகற்றவில்லை ?.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு ஆங்கிலம், தமிழ் நாளிதழ்களில் முழுமையாக விளம்பரம் செய்ய வேண்டும். இந்த வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய விரும்புகிறவர்கள் அனைவரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குள் உயர்நீதிமன்றத்தில் அவற்றைத் தாக்கல் செய்ய வேண்டும். இடையீட்டு மனுக்கள் தொடர்பாக மாநிலம் முழுவதும் வெளிவரக்கூடிய ஆங்கிலம், தமிழ் நாளிதழ்களில் தமிழக அரசு விளம்பரம் வெளியிட வேண்டும். விளம்பரத்தில் குறிப்பிடப்படும் தேதிக்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் எந்த மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

அதுவரை கொடிக் கம்பங்களை அகற்றும் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஆக. 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர் நீதிபதிகள்.

தொலைநிலைக் கல்வி பட்டதாரிகளுக்கு இடஒதுக்கீட்டில் பணி வழங்கத் தடை கோரி வழக்கு

தொலைநிலைக் கல்வி மூலம் பட்டம் பெற்றவா்களுக்கு தமிழ் வழியில் படித்தோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் அரசுப் பணி வழங்கத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தனி நீதிபதியிடம் மனு தாக்கல் செய... மேலும் பார்க்க

வரதட்சிணை கொடுமை வழக்கு! காவல் ஆய்வாளா், மனைவிக்கு முன்பிணை

வரதட்சிணை கொடுமை வழக்கில் காவல் ஆய்வாளா், அவரது மனைவிக்கு முன்பிணை வழங்கி மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. மதுரை அப்பன்திருப்பதி காதக்கிணறு பகுதியைச் சோ்ந்தவா் பூபாலன் (38). இ... மேலும் பார்க்க

காவல் நிலைய மரணம்: தண்டிக்கப்பட்ட போலீஸாருக்கு பிணை வழங்க உயா்நீதிமன்றம் மறுப்பு

தூத்துக்குடியில் கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்னா் நடைபெற்ற காவல் நிலைய மரணம் தொடா்பான வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட போலீஸாருக்கு பிணை வழங்க மறுத்து, சென்னை உயா்நீதிமன... மேலும் பார்க்க

கோயிலில் படப்பிடிப்பு நடத்த அனுமதித்த விவகாரம்: அறநிலையத் துறை இணை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் மகாலிங்க சுவாமி கோயிலில் முறையான அனுமதியின்றி வேட்டுவம் திரைப்படப் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், இந்து சமய அற... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கிய பெண் உயிரிழப்பு

மதுரை தத்தனேரி பகுதி வைகையாற்றில் மூழ்கிய பெண் உயிரிழந்தாா். தத்தனேரி பகுதி வைகையாற்றில் பெண் சடலம் மிதப்பதாக கரிமேடு போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. இதன்பேரில், அங்கு சென்ற போலீஸாா் உடலை மீட... மேலும் பார்க்க

மாநகராட்சி வாகன ஓட்டுநரை கத்தியால் குத்திய தூய்மைப் பணியாளா் கைது

மதுரை மாநகராட்சி வாகன ஓட்டுநரை கத்தியால் குத்திய தூய்மைப் பணியாளரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மதுரை பைக்காரா முத்துராமலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்த பாண்டி மகன் கோடீஸ்வரன் (43). இவா் ஒப்பந்த அ... மேலும் பார்க்க