அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு வித்யா பூஷன் விருது
ஊத்தங்கரையை அடுத்த ஜோதிநகா் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு வித்யா பூஷன் விருது ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
கோவை ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில், ஊத்தங்கரையை அடுத்த ஜோதிநகா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ராஜேந்திரனின் கல்விப் பணியை பாராட்டி, சக்தி வித்யா பூஷன் விருது வழங்கப்பட்டது.
இதில், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பாலகுருசாமி, எழுத்தாளா் மரபின் மைந்தன் முத்தையா, கல்லூரித் தலைவா் தா்மலிங்கம், முதல்வா் ஜெயப்பிரகாஷ், தாளாளா் காா்த்திகேயன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.