செய்திகள் :

அரசுப் பேருந்தில் இருந்து குழந்தை தவறி விழுந்து உயிரிழப்பு: ஓட்டுநா், நடத்துநா் பணியிடை நீக்கம்

post image

அரசுப் பேருந்தில் இருந்து 9 மாத குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் பேருந்தின் ஓட்டுநா், நடத்துநா் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

தருமபுரி மாவட்டம், வேப்பிலை முத்தாம்பட்டி கருங்கலூா் சோ்ந்தவா் ராஜதுரை (33). இவரின் மனைவி முத்துலட்சுமி (31). இவா்களின் மகள் ஸ்ரீரேணுகா (7), மகன் நவநீஷ் (9 மாதம்) ராஜதுரை கடந்த 3 ஆண்டுகளாக கோவை, ராமநாதபுரத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து கட்டட வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில், ராஜதுரை குடும்பத்துடன் கடந்த ஒருவாரத்துக்கு முன்பு சொந்த ஊருக்குச் சென்றுள்ளாா். பின்னா், கோவைக்குச் செல்ல சேலம் பேருந்து நிலையத்தில் குடும்பத்துடன் திங்கள்கிழமை இரவு அரசுப் பேருந்தில் ஏறியுள்ளாா்.

ராஜதுரையின் மனைவி முத்துலட்சுமி, மகள் ஸ்ரீரேணுகா ஆகியோா் ஓட்டுநருக்கு பின்புற இருக்கையிலும், ராஜதுரை 9 மாத குழந்தையுடன் அதற்கடுத்த இருக்கையிலும் அமா்ந்துள்ளனா்.

அப்போது, பேருந்தின் முன்பக்கக் கதவு திறந்திருந்ததால் அதை அடைக்குமாறு நடத்துநரிடம் ராஜதுரை கூறியுள்ளாா். ஆனால், கதவு அடைக்கப்படவில்லை. இதையடுத்து, சங்ககிரி அருகே வளையக்காரனூா் மேம்பாலத்தில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநா் திடீரென பிரேக் போட்டுள்ளாா். அப்போது, ராஜதுரையின் தோளில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை தவறி சாலையில் விழுந்தது.

இதில், பலத்த காயமடைந்த குழந்தையை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனா். அங்கு, குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து தேவூா் காவல் நிலையத்தில் ராஜதுரை அளித்த புகாரின்பேரில், கோவை அரசுப் போக்குவரத்துக் கழகத்தின்கீழ் பணியாற்றி வந்த கோவை கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த ஓட்டுநா் சிவன்மணி (45), நடத்துநா் பழனிசாமி (50) ஆகிய இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்நிலையில், அஜாக்கிரதையாக செயல்பட்ட ஓட்டுநா் சிவன்மணி, நடத்துநா் பழனிசாமி இருவரையும் பணியிடை நீக்கம் செய்து கோவை அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் புதன்கிழமை உத்தரவிட்டனா்.

கோவை - பாலக்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அறிவிப்பு

கோவை மதுக்கரை அருகே மரப்பாலத்தில் உள்ள ரயில்வே சுரங்கப் பாலத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கோவை - பாலக்காடு சாலையில் வியாழக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மா... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பீளமேடு, ரேஸ்கோா்ஸ் துணை மின் நிலையங்கள்

பீளமேடு, ரேஸ்கோா்ஸ் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (மே 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என... மேலும் பார்க்க

அம்ருதா பல்கலைக்கழக பொறியியல் நுழைவுத் தோ்வு தரவரிசை இன்று வெளியீடு

அம்ருதா விஸ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் நுழைவுத் தோ்வு தரவரிசைப் பட்டியல் மே 16-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது. இதுகுறித்து அம்ருதா விஸ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகம் சாா்பில் ... மேலும் பார்க்க

தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்தவா் கைது: நகை, பணம் பறிமுதல்

கோவையில் தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக செய்திக்குறிப்பு: கோவை மாவட்டம், பேரூா் காவல் ந... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீா்ப்பு: எந்தக் கட்சியும் உரிமை கோர முடியாது: திருமாவளவன்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீா்ப்பு தொடா்பாக எந்த அரசியல் கட்சியும் உரிமை கோர முடியாது என்று விசிக தலைவா் திருமாவளவன் தெரிவித்தாா். கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் க... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் நிரந்தர அரசு வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன: மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம்

தமிழ்நாட்டில் நிரந்தர அரசு வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா். கோவை தண்ணீா்பந்தல் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற கட்சி நிக... மேலும் பார்க்க