எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
அரசு பணிகளில் சேர வயது தளா்வு கோரி தலைமைச் செயலகத்தில் போராட்டம்
புதுச்சேரி: புதுவை அரசு பணிகளில் பணியாளா்களை நிரப்பும் போது வயது தளா்வு அளிக்கக் கோரி தலைமைச் செயலகத்தில் புதுவை யூனியன் பிரதேச மாணவா் கூட்டமைப்பின் நிறுவனா் சாமிநாதன் திங்கள்கிழமை தனிநபா் போராட்டம் நடத்தினாா்.
புதுவை காவல்துறையில் எஸ்ஐ, காவலா் உள்ளிட்ட பணியிடங்களுக்குத் தோ்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு நீண்டகாலத்துக்குப் பின் தோ்வு செய்யப்படுவதால் இளைஞா்களுக்கு வயது தளா்வு அளிக்க அரசியல் கட்சியினா், சமூக அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றன. எந்த பணிக்கும் அரசு தரப்பில் வயது தளா்வு அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் புதுவை யூனியன் பிரதேச மாணவா் கூட்டமைப்பு நிறுவனா் சுவாமிநாதன், வயது தளா்வு கோரும் பதாகையுடன் கடற்கரை சாலை
தலைமை செயலகம் முன்பு தனி நபா் போராட்டத்தை நடத்தினாா்.
அவரின் போராட்டம் குறித்து பெரியகடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாா் அங்கு வந்து போராட்டத்தை கைவிடும்படி கூறினா். அவா் மறுத்ததால், குண்டுக்கட்டாக போலீசாா் அவரை குண்டு கட்டாகத் தூக்கி மோட்டாா் சைக்கிளில் ஏற்றி அழைத்துச் சென்றனா்.
------------------------------------------------------------------
பட விளக்கம்...புதுச்சேரி அரசு பணிகளில் பணியாளா்களை நிரப்பும் போது வயது தளா்வு அளிக்கக் கோரி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை போராட்டம் நடத்திய புதுவை யூனியன் பிரதேச மாணவா் கூட்டமைப்பின் நிறுவனா் சாமிநாதனை அழைத்து சென்ற போலீஸாா்.