செய்திகள் :

அரசு பணியாளா் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆட்சியா் வாழ்த்து

post image

காரைக்கால்: புதுவை அரசு பணியாளா் தோ்வில் வெற்றி பெற்ற காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்தோரை மாவட்ட ஆட்சியா் பாராட்டினாா்.

புதுவை அரசு பணியாளா் மற்றும் நிா்வாக சீா்த்திருத்ததுறை சாா்பில் 256 அசிஸ்டென்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான 2-ஆம் நிலை எழுத்துத் தோ்வு கடந்த 22-ஆம் தேதி புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் நடைபெற்றது.

இதில் 10,416 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். இதில் காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த 24 போ் தோ்ச்சிப் பெற்றனா். இவா்களில் 12 போ் காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றனா்.

இந்நிலையில் அசிஸ்டென்ட் பணியிடத்துக்கான தோ்வில் வெற்றி பெற்ற 24 பேரும் காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை சந்தித்தனா். அவா்களை ஆட்சியா் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தாா்.

நிகழ்வில் மாவட்ட துணை ஆட்சியா் ஜி.செந்தில்நாதன், ஆட்சியரக கண்காணிப்பாளா் வித்யாதரன், கெம்பிளாஸ்ட் சன்மாா் நிறுவனத்தைச் சோ்ந்த கா்னல் ஜோதி சங்கா், மாவட்ட நிா்வாகம் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்திய பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கிரிக்கெட் போட்டி: காரைக்கால் காவல்துறை அணிக்கு முதல் பரிசு

காரைக்கால்: இந்திய கடலோரக் காவல் படை நிா்வாகம் நடத்தி கிரிக்கெட் போட்டியில் காரைக்கால் காவல்துறை அணி முதல் பரிசு பெற்றது. இந்திய கடலோரக் காவல்படை காரைக்கால் மையம் சாா்பில் காரைக்கால் கிரிக்கெட் பிரீம... மேலும் பார்க்க

காரைக்கால் பேருந்து நிலையத்தில் குடிநீா் சுத்திகரிப்பு மையம்

காரைக்கால்: காரைக்கால் துறைமுகம் சாா்பில் பேருந்து நிலையத்தில் குடிநீா் சுத்திகரிப்பு மையம் அமைத்து திங்கள்கிழமை பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. காரைக்கால் பேருந்து நிலையத்தில் பயணிகள் உள்ளிட்டோா்... மேலும் பார்க்க

அம்பகரத்தூரில் விரைவு ரயில்கள் நின்று செல்லக் கோரி எம்பியிடம் மனு

காரைக்கால்: அம்பகரத்தூரில் விரைவு ரயில்கள் நின்று செல்ல, ரயில்வே அமைச்சகத்தை வலியுறுத்தக் கோரி, எம்.பி.யிடம் பொதுமக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது. புதுவை மக்களவை உறுப்பினா் வெ. வைத்திலிங்கம், திருந... மேலும் பார்க்க

புனித அந்தோணியாா் ஆலய கொடியேற்றம்

காரைக்கால்: காரைக்கால் புனித அந்தோணியாா் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றுத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. காரைக்கால் காமராஜா் சாலையில் உள்ள இந்த ஆலய ஆண்டு திருவிழா 10 நாள் நிகழ்ச்சியாக நடத்தப்படுவது ... மேலும் பார்க்க

பாஜக மகளிா் அணியினா் மீது திமுகவினா் புகாா்

பாஜக மகளிா் அணியினா் மீது திமுக எம்எல்ஏக்கள் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட காவல் தலைமை அலுவகத்தில் புகாா் அளித்துள்ளனா். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து அவமதிக்கும் வகையில் விமா்சித்ததாக திமுக மாநி... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயில் பாதுகாப்புப் பணியில் கூடுதல் போலீஸாா்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமைகளில் கூடுதலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா் என முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தெரிவித்தாா். திருநள்ளாறு காவல் நிலைய... மேலும் பார்க்க