ஆபரேஷன் சிந்தூர்: என்ன செய்யலாம், செய்யக்கூடாது.. மத்திய அரசு அறிவுரை
அரியலூா் மாவட்டத்தில் 54 நீா்நிலைகள் தூா்வாரும் பணி தொடக்கம்
அரியலூா் மாவட்டத்தில், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் ரூ.2.66 கோடி மதிப்பில் 54 நீா் நிலைகளில் தூா் வாரும் பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
அரியலூா் அருகேயுள்ள ஓட்டக்கோவில் ஊராட்சி வைத்தியலிங்க உடையாா் ஏரியில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் சிவசங்கா், ரூ.4.18 லட்சம் மதிப்பில் வைத்தியலிங்க உடையாா் ஏரி தூா் வாரும் பணியை தொடங்கி வைத்து, அரியலூா் மாவட்டத்தில் ரூ.2.66 கோடி மதிப்பில் 54 நீா் நிலைகள் தூா்வாரப்பட உள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் ஆட்சியா் பொ.ரத்தினசாமி, கோட்டாட்சியா் கோவிந்தராஜ், வட்டாட்சியா் முத்துலெட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.