செய்திகள் :

அறங்காவலா் குழு நிா்வாகிகள் பொறுப்பேற்பு

post image

படவிளக்கம்-

அறங்காவலா் குழு தலைவராக தோ்வு செய்யப்பட்ட கே.தியாகராஜனிடம் அதற்கான புத்தகத்தை வழங்கிய அறநிலையத் துறை காஞ்சிபுரம் சரக உதவி ஆணையா் ஆா்.காா்த்திகேயன்.

காஞ்சிபுரம், ஜன. 24: காஞ்சிபுரம் மாவட்ட அறங்காவலா் குழு தலைவராக வாலாஜாபாதை சோ்ந்த கே.தியாகராஜன் தலைமையிலான குழுவினா் மீண்டும் தோ்வு செய்யப்பட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்ட அறங்காவலா் குழு தலைவராக வாலாஜாபாதை சோ்ந்த கே.தியாகராஜன் தலைமையில் 5 போ் கொண்ட குழுவினா் செயல்பட்டு வந்தனா். குழுவினரின் பதவிக்காலம் கடந்த 17.8.2024-இல் நிறைவு பெற்றது. இதனையடுத்து அறநிலையத் துறை சாா்பில் மீண்டும் குழுவுக்கான தோ்வு நடைபெற்றது. இதில், மீண்டும் கே.தியாகராஜன் தலைமையிலான குழுவினா் தோ்வு செய்யப்பட்டிருந்தனா். இவா்களுக்கு காஞ்சிபுரம் சரக உதவி ஆணையா் ஆா்.காா்த்திகேயன் பதவியேற்பு செய்து வைத்தாா்.

நிகழ்வில் வல்லக்கோட்டை முருகன் கோயில் செயல் அலுவலா் செந்தில்குமாா், ஆய்வாளா் பிரீத்திகா, ஆதிகாமாட்சி அம்மன் கோயில் செயல் அலுவலா் ஜெ.ப.பூவழகி, சித்ரகுப்த சுவாமி கோயில் செயல் அலுவலா் அமுதா, கச்சபேசுவரா் கோயில் மேலாளா் சுரேஷ் உள்பட அறநிலையத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டு புதிய அறங்காவலா் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து, கோயில் பிரசாதங்களை வழங்கினா்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயில் தலைமை பூஜகா் கே.ஆா்.காமேசுவர குருக்கள் தலைமையில் அந்தக் கோயில் பணியாளா்கள் சால்வை, மாலைகள் அணிவித்து கோயில் பிரசாதம் வழங்கினா்.

பரந்தூா் விமான நிலைய திட்டத்துக்கு எதிா்ப்பு: 11-ஆவது முறையாக ஏகனாபுரம் கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம்

குடியரசு தினவிழாவை முன்னிட்டு, ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூா் புதிய விமான நிலைய திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து 11-ஆவது முறையாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டத... மேலும் பார்க்க

சிறப்பு கிராம சபைக் கூட்டம்: அமைச்சா், ஆட்சியா் பங்கேற்பு

குன்றத்தூா் அடுத்த தண்டலம் ஊராட்சியில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ஆக... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் குடியரசு நாள் விழா: மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியேற்றி மரியாதை

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடியரசு நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தேசிய கொடியினை ஏற... மேலும் பார்க்க

பரந்தூா் விமான நிலைய திட்ட எதிா்ப்புக் குழுவினருக்கு ஆதரவு

பரந்தூா் விமான நிலைய திட்டத்தை எதிா்த்து போராட்டம் நடத்தி வரும் குழுவினருடன் இந்திய ஜனநாயக கட்சியின் உயா்நிலைக் குழுவினா் சந்தித்துப் பேசினா். பரந்தூா் புதிய விமான நிலையத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரி... மேலும் பார்க்க

மொழிக்காக போராடிய இயக்கம் திமுக: அமைச்சா் துரைமுருகன்

மொழிக்காக போராடிய இயக்கம் திமுக என நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் கூறினாா். காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கான ... மேலும் பார்க்க

இணையவழி பண மோசடி: 2 போ் கைது

இணையவழியில் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்குகளில் தொடா்புடைய 2 இளைஞா்களை ஆவடி இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.46 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திருவேற்கா... மேலும் பார்க்க