செய்திகள் :

அலாஸ்காவில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!

post image

அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அலாஸ்கா நகரங்களில் புதன்கிழமை பகல் 12.37 (உள்ளூர் நேரப்படி) மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அலாஸ்காவில் உள்ள சாண்ட் பாயிண்ட் தீவுக்கு 87 கி.மீ. தொலைவில் மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம், 20 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, சிறிதளவிலான பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். அதிகபட்சமாக 5.2 ரிக்டர் அளவில் மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அலாஸ்கா மாகாணத்தில் உள்ள பல்வேறு நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், உயிர் சேதம் அல்லது பொருள் சேதம் பற்றிய தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அமெரிக்க அரசு வெளியிடவில்லை.

சுனாமி எச்சரிக்கை

அலாஸ்காவில் உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, தெற்கு அலாஸ்கா மற்றும் அலாஸ்கா பெனின்சுலா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சாண்ட் பாயிண்ட் கடற்கரை பகுதிகளில் அதிகபட்சமாக 6.1 செ.மீ. அளவுக்கு சுனாமி அலைகள் எழுந்தது.

சுனாமி எச்சரிக்கை

இரண்டு மணிநேர கண்காணிப்புக்கு பிறகு சுனாமி எச்சரிக்கையை தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் திரும்பப்பெற்றது.

இருப்பினும், அலாஸ்கா கடற்கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அலாஸ்கா மாகாணம் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பசிபிக் வளையத்தில் அமைந்துள்ளது. இதுவரை அதிகபட்சமாக கடந்த 1964 ஆம் ஆண்டு 9.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 2023 ஆம் ஆண்டு அலாஸ்கா பெனின்சுலாவில் 7.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

A tsunami warning has been issued following a powerful earthquake felt in Alaska, USA.

இதையும் படிக்க : இந்திய பொருள்களுக்கு வரி; அமெரிக்க பொருள்களுக்கு விலக்கு: டிரம்ப் சூசகம்

எரிசக்திக்கே முன்னுரிமை..! நேட்டோவின் எச்சரிக்கையை நிராகரித்த இந்தியா!

ரஷியாவுடன் வர்த்தகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளக்கூடும் என நேட்டோ பொதுச் செயலர் விடுத்த எச்சரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது. மேலும், எரிசக்திக்கே முன்னுரிமை எனத் தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க

செனகலில் இருந்து பிரான்ஸ் படைகள் வெளியேற்றம்! ராணுவத் தளங்கள் அரசிடம் ஒப்படைப்பு!

ஆப்பிரிக்க நாடுகளில், பிரான்ஸின் செல்வாக்குக் குறைந்து வரும் சூழலில், அதன் கடைசி மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் இருந்து பிரன்ஸ் படைகள் முற்றிலும் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஆப்பிரிக்காவி... மேலும் பார்க்க

காஸாவின் ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல்! 2 பேர் கொலை!

காஸாவின் ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயத்தின் மீது இஸ்ரேல் நடத்திய ஷெல் தாக்குதல்களில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல... மேலும் பார்க்க

சிரியா உள்நாட்டு மோதலுக்கு புதிய போர்நிறுத்தம் அறிவிப்பு! வெளியேறும் அரசுப் படைகள்!

சிரியா நாட்டின் ஸ்வேடா மாகாணத்தில், துரூஸ் இன ஆயுதக்குழுவுடனான மோதல்களுக்கு, புதியதாக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கிருந்து அரசுப் படைகள் வெளியேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.துரூஸ் இனமக... மேலும் பார்க்க

இராக்கில் தொடரும் அவலம்.. வணிக வளாகத்தில் பயங்கர தீ! 60 பேர் பலி!

இராக் நாட்டின் கிழக்குப் பகுதியில், புதியதாகத் திறக்கப்பட்ட வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குழந்தைகள் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது. வாசிட் மாகாணத்தின் குட்... மேலும் பார்க்க

ராணுவ வாகனத்தில் பலூச். விடுதலைப் படை தாக்குதல்: மேஜர் உள்பட 29 பாக். வீரர்கள் பலி!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் ராணுவ மேஜரும் கொல்லப்பட்டார். பாகிஸ்தானில் தங்களுக்கென தனி ... மேலும் பார்க்க