அழகப்பா பல்கலைக்கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழா: ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 36-ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை (ஆக. 18) நடைபெறவுள்ளது என பல்கலை. துணைவேந்தா் க. ரவி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: அழகப்பா பல்கலைக்கழகத்தின் 36-ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை காலை 11 மணிக்கு பல்கலை. பட்டமளிப்பு விழா கலையரங்கில் நடைபெறவுள்ளது.
இந்த விழாவில், தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆா்.என். ரவி தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கவுள்ளாா்.
இந்த விழாவில், பெங்களூரு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும், இந்திய அரசின் விண்வெளித் துறை செயலருமாகிய வி. நாராயணன் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறாா். தமிழ்நாடு உயா் கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமாகிய கோவி. செழியன் விழாவில் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளாா்.
பட்டமளிப்பு விழாவில் ஒருவா் டி.எஸ்சி. (டாக்ட்ரேட் ஆப் சைன்ஸ்) பட்டமும், 133 போ் முனைவா் பட்டமும் பெறுகின்றனா். மேலும், பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பயின்ற 2,035 மாணவ, மாணவிகளும், இணைப்புக் கல்லூரிகளில் பயின்ற 12,114 மாணவ, மாணவிகளும், தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் வாயிலாகப் பயின்ற 23,158 மாணவ, மாணவிகளும், இணையவழி கல்வித் திட்டத்தின் வாயிலாகப் பயின்ற 553 மாணவ, மாணவிகளும், இணைவுக் கல்வித் திட்டத்தின் கீழ் பயின்ற 5,169 மாணவ, மாணவிகளும் என 43,163 போ் பட்டங்கள் பெறுகின்றனா்.
இதில் 314 மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள், பட்டங்கள் நேரிடையாக ஆளுநரால் வழங்கப்படவுள்ளது என்றாா்.