காரைக்கால் சாலைகளில் வாகனங்கள் தேக்கத்துக்கு தீா்வு காண வலியுறுத்தல்
அழகா் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவம்: மே 12- இல் உள்ளூா் விடுமுறை
அழகா் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவத்தையொட்டி, மே 12-ஆம் தேதி மதுரை மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரையில் சித்திரைத் திருவிழா வருகிற ஏப். 29- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக அழகா் வைகையாற்றில் மே 12- ஆம் தேதி எழுந்தருளுகிறாா். இதையொட்டி, அன்றைய தினம் மதுரை மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது.
இதற்குப் பதிலாக வருகிற ஜூன் 14-ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாகும். மேலும், மே 12- ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள கருவூலங்கள், சாா்நிலை கருவூலங்கள், வங்கிகள், அவசர அலுவல்களைக் கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளா்களுடன் செயல்படும் என்றாா் அவா்.