செய்திகள் :

அவல்பூந்துறையில் ரூ.10.45 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

post image

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 10.45 லட்சத்துக்கு வெள்ளிக்கிழமை கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) ஏலம் மூலம் விற்பனை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு விவசாயிகள் 172 மூட்டைகள் கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில் முதல் தரம் கிலோ குறைந்தபட்சமாக ரூ.222.99-க்கும், அதிகபட்சமாக ரூ.232.99-க்கும், சராசரியாக ரூ.227.60-க்கும் ஏலம் போனது. இரண்டாம் தரம் கிலோ குறைந்தபட்சமாக ரூ.86.99-க்கும், அதிகபட்சமாக ரூ223.09-க்கும், சராசரியாக ரூ.211.99-க்கும் ஏலம் போனது.

மொத்தம் 4,874 கிலோ எடையுள்ள கொப்பரை ரூ.10 லட்சத்து 45 ஆயிரத்து 759-க்கு விற்பனையானதாக விற்பனைக் கூட அதிகாரி சதீஷ் தெரிவித்தாா்.

மருத்துவ முகாமில் ஆட்சியா் ரத்த தானம்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் 39-ஆவது அமைப்பு தினத்தையொட்டி, ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை தொடங்கிவைத்த ஆட்சிய... மேலும் பார்க்க

ரயில்கள் மீது கற்கள் எறிவதை தடுக்க போலீஸாா் விழிப்புணா்வு

ஈரோட்டில் ரயில்கள் மீது கல் எறிவதாலும் தண்டவாளங்களில் கற்களை வைப்பதாலும் ஏற்படும் ஆபத்து குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். ஈரோடு மாவட்ட... மேலும் பார்க்க

ஈரோட்டில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

ஈரோட்டில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியை மேயா் சு.நாகரத்தினம் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். நாடு முழுவதும் நெகிழிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் வெகுவாக மாசடைந்து வருகிறது. இதனைத் தடுக்க ஈரோடு மாந... மேலும் பார்க்க

அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது

அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது என முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எம்.ஏ. தெரிவித்தாா். கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் வெளிபடுத்த வேண்டிய கருத்தை பொதுவெ... மேலும் பார்க்க

நவரசம் மகளிா் கல்லூரியில் ஆசிரியா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் பயிற்சி மற்றும் கற்றல் குறித்த இணையவழி பேராசிரியா் மேம்பாட்டு நிகழ்ச்சி அறச்சலூா் நவரசம் மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. நிகழ்ச்சிக்கு, கல்லூரியி... மேலும் பார்க்க

உர மேலாண்மை மூலம் பாக்கு உற்பத்தியை அதிகரிக்கலாம்

உர மேலாண்மையில் கவனம் செலுத்துவதன் மூலம் பாக்கு உற்பத்தியை அதிகரிக்கலாம் என வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோ... மேலும் பார்க்க