மத்திய அரசால் தொடா்ந்து தமிழகத்துக்கு நிதிநெருக்கடி! தமிழக சட்டப்பேரவை தலைவா் ப...
அவிநாசியில் பிப்11-இல் வள்ளலாா் தைப்பூச பெருவிழா
அருட்பிரகாச வள்ளலாா் தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு, அவிநாசி, திருமுருகன்பூண்டி, சேவூா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) அன்னதானம் வழங்க திருமுருக வள்ளலாா் கோட்டத்தினா் முடிவு செய்துள்ளனா்.
திருமுருகன்பூண்டி திருமுருக வள்ளலாா் கோட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு, ஒருங்கிணைப்பாளா் சிதம்பரசாமிநாதன் தலைமை வகித்தாா்.
இதில், வள்ளலாா் தைப்பூச பெருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், திருமுருகன்பூண்டி திருமுருக வள்ளலாா் கோட்டத்தில் பிப்ரவரி 11-ஆம் தேதி காலை 7 மணிக்கு கொடியேற்றுதல், ஜோதி ஏற்றுதல், அகவல் பாராயணம், அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவது, இதைத் தொடா்ந்து அவிநாசி வீர ஆஞ்சனேயா் கோயில் வளாகம் அருகே காலை 11 மணிக்கு அன்னதானம் வழங்குதல், சேவூா் கல்யாண வெங்கட்ரமணப் பெருமாள் கோயில் வளாகம் அருகே காலை 10 மணிக்கு அகவல் பாராயணம் நிகழ்ச்சி, 11 மணிக்கு அன்னதானம் வழங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.