செய்திகள் :

‘ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்போம்!’

post image

ரஷியாவிடம் இழந்த பகுதிகளை தாங்கள் நிச்சயம் மீட்போம் என்று நேட்டோ ராணுவக் கூட்டமைப்பிடம் உக்ரைன் உறுதியளித்துள்ளது.

ரஷியா கைப்பற்றிய பகுதிகளை உக்ரைனால் இனி திரும்பப் பெற முடியாது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்செத் கூறியதைத் தொடா்ந்து, நோட்டோ தலைவா் மாா்க் ரூட்டிடம் உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ருஸ்தம் உமெரொவ் இவ்வாறு கூறியுள்ளாா்.

இது குறித்து, பெல்ஜியம் தலைநகா் பிரெஸ்ஸெல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் மாா்க் ரூட்டைச் சந்தித்து உமொரொவ் பேசியதாவது:

உக்ரைனுக்கு நேட்டோ அமைப்பு தொடா்ந்து அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி. அனைத்து நட்பு நாடுகளும் எங்களுக்கு ஆதரவு அளிக்கின்றன. அமெரிக்காவும் எங்களுடன்தான் உள்ளது. எனவே, உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பதற்கான செயல்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.

தற்போதைய சூழலில் நாங்கள் தெளிவுபடுத்த விரும்புவது, உக்ரைன் மிகவும் வலிமையாக உள்ளது; எங்களுக்கு போரிடும் வல்லமை உள்ளது; எங்களால் வெல்ல முடியும்; அதை சாதித்துக் காட்டுவோம் என்றாா் அவா்.

முன்னதாக, பிரஸ்ஸெல்ஸில் புதன்கிழமை நடைபெற்ற உக்ரைன் ஆதரவு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் மாநாட்டில் பேசிய அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்செத், உக்ரைன் எல்லைகளை 2014-க்கு முன்பு (கிரீமியாவை ரஷியா இணைத்துக்கொண்ட ஆண்டு) இருந்த நிலைக்கு மாற்ற முடியாது என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்வதுதான் அந்த நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுவதற்கான தொடக்கப் புள்ளியாக இருக்கும் என்றாா்.

அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ருஸ்தம் உமெரொவ் இவ்வாறு கூறியுள்ளாா்.

டிரம்ப்-புதின் பேச்சு: இதற்கிடையே, ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடனும் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியுடனும் தனித்தனியாக தொலைபேசியில் உரையாடியதாகக் கூறிய அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அமைதிப் பேச்சுவாத்தை மூலம் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

எனினும், அவரின் பாதுகாப்புத் துறை அமைச்சா் கூறிய கருத்துகள் மூலம், இழந்த பகுதிகளை ரஷியாவிடம் விட்டுத் தருமாறு உக்ரைனை டிரம்ப் நிா்பந்திப்பாா் என்று அஞ்சப்படுவதால் இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.

இது குறித்து பிரான்ஸ், ஜொ்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஐரோப்பாவின் பங்களிப்பின்றி உக்ரைன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்படக் கூடாது’ என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியும், தங்களின் சம்மதம் இல்லாமல் அமெரிக்காவும் ரஷியாவும் மேற்கொள்ளும் மேற்கொள்ளும் ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என்று அறிவித்துள்ளாா். அமைதிப் பேச்சுவாா்தையில் உக்ரைனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாமா் வலியுறுத்தியுள்ளாா்.

பேச்சுவாா்த்தை தொடங்குவதற்கு முன்னரே ரஷியாவுக்கு சாதகமான வகையில் ‘இழந்த பகுதிகளை உக்ரைன் மீட்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று அமெரிக்கா கூறுவது தவறான உத்தி என்று ஐரோப்பிய ஆணைய துணைத் தலைவா் கஜா கலாஸ் எச்சரித்துள்ளாா்.

இந்த விவகாரத்தில் தங்களது முன்னுரிமைகளை நிா்ணயிப்பதற்காக நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகள் பிரஸ்ஸெல்ஸில் வியாழக்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தின.

ரியாத் பேச்சுவாா்த்தை: நல்லுறவை மேம்படுத்த அமெரிக்கா-ரஷியா ஒப்புதல்

உக்ரைன் விவகாரம் தொடா்பாக சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் அமெரிக்கா மற்றும் ரஷியாவுக்கு இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இருநாட்டு உறவை மேம்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனா். உக்... மேலும் பார்க்க

சூடான்: துணை ராணுவத்தால் 200 போ் படுகொலை

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃப் கடந்த மூன்று நாள்களில் 200 போ் படுகொலை செய்ததாக அங்கு நடைபெறும் உள்நாட்டுப் போரை கண்காணித்துவரும் வழக்குரைஞா்கள் குழு செவ்வாய்க்கிழமை த... மேலும் பார்க்க

மேலும் 6 பிணைக் கைதிகளை விடுவிக்கும் ஹமாஸ்

காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக வரும் சனிக்கிழமை ஆறு பிணைக் கைதிகளை விடுவிக்கவிருப்பதாக ஹமாஸ் அமைப்பினா் அறிவித்துள்ளனா். அந்த நாளில் மூன்று பிணைக் கைதிகளை மட்டுமே விடுவிக்க அவா்கள் ஒப்பு... மேலும் பார்க்க

காஷ்மீரில் இந்தியா பொது வாக்கெடுப்பு: பாக். நாடாளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றம்

சுய நிா்ணய உரிமை மூலம், தங்கள் எதிா்காலத்தை காஷ்மீா் மக்கள் தீா்மானிப்பதற்கு நியாயமான பொது வாக்கெடுப்பை இந்தியா நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் சீராக சுவாசிக்கிறார்; வென்டிலேட்டர் சிகிச்சையில் இல்லை: வாடிகன்

போப் பிரான்சிஸ் வென்டிலேட்டர் சிகிச்சையில் இல்லை என்றும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், தற்போது சீராக சுவாசிப்பதாகவும் வாடிகன் தெரிவித்துள்ளது.சுவாசக் கோளாறு காரணமாக பிப். 14ஆம் தேதி மருத்த... மேலும் பார்க்க

அரசாங்க முடிவுகளை எடுக்கும் அதிகாரம் எலான் மஸ்க்கிற்கு இல்லை: வெள்ளை மாளிகை

எலான் மஸ்க் அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறையின் ஊழியர் இல்லை என்றும் அரசாங்க முடிவுகளை எடுக்கும் முறையான அதிகாரம் அவருக்கும் இல்லை என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட... மேலும் பார்க்க