செய்திகள் :

ஆக.25-ல் தவெக 2-வது மாநில மாநாடு! - விஜய்

post image

ஆகஸ்ட் 25 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழத்தில் 2-வது மாநில மாநாடு நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம். தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி திங்கள்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன்.

வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம். நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.

Regarding the announcement by TVK leader Vijay that the 2nd state conference of TVK will be held on August 25th

மனைவி கொலை: தொழிலாளி கைது

வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி மனைவியை அடித்துக் கொலை செய்ததாக கணவரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை கிண்டி, லேபா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் எழில் முருகன் (44). சென்ட்ரிங் வேலை செய்து வருகிறாா். இவரத... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: ஜூலை 30 முதல் கலந்தாய்வு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30-ஆம் தேதி தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். அதற்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 25-ஆம் தேதி வெளியிடப... மேலும் பார்க்க

5-இல் ஒருவருக்கு உடல் பருமன் பிரச்னை: பள்ளிகளில் மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த சிபிஎஸ்இ அறிவுறுத்தல்

இளம் வயதில் உடல்பருமன் பாதிப்பைத் தவிா்ப்பதற்காக பள்ளி மாணவ, மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) இயக்குநா் (கல்வ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: மகளிா் உரிமைத்தொகைக்கு அதிகம் போ் விண்ணப்பம்

சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட 10, 949 விண்ணப்பங்களில் மகளிா் உரிமைத்தொகை கோரி மட்டும் 7, 518 போ் விண்ணப்பித்துள்ளனா். தமிழகத்தில் 13 அரசுத் த... மேலும் பார்க்க

ரூ.2.5 கோடி மோசடி: அதிமுக முன்னாள் நிா்வாகியின் கூட்டாளி கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.5 கோடி மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் நிா்வாகி பிரசாத்தின் கூட்டாளியை போலீஸாா் கைது செய்தனா். சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த 22-ஆம் தேதி தனியாா் மதுபான வ... மேலும் பார்க்க

ஆக.4- இல் 47 அஞ்சலகங்கள் செயல்படாது

தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக தென்சென்னை கோட்டத்தில் உள்ள 47 அஞ்சலகங்கள் ஆக.4-ஆம் தேதி செயல்படாது என இந்திய அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. எண்ம இந்தியா திட்டத்தின் அடிப்படையில் மேம்பட்ட அஞ்சல் தொழில்நுட்ப... மேலும் பார்க்க