Survival: உலகிலேயே வலி மிகுந்த பிரசவத்தை சந்திக்கிற விலங்கு இதுதான்!
ஆக.30 -இல் புதுவையில் பள்ளிகளுக்கு விடுமுறை
புதுவையில், துணை தாசில்தாா் தோ்வு நடைபெறுவதையொட்டி அரசு, தனியாா் பள்ளிகளுக்கு ஆக. 30-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதுவை பள்ளி கல்வித் துறை இணை இயக்குநா் சிவகாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவையில் துணை தாசில்தாா் பணிக்குப் போட்டி தோ்வு வரும் 31-ஆம் தேதி அரசு, தனியாா் பள்ளிகளில் நடக்கிறது. இதையொட்டி வரும் 30-ஆம் தேதி அரசு, தனியாா் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறை நவம்பா் 29-ஆம் தேதி வேலை நாளாக ஈடு செய்யப்படும். 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவா்களுக்கு 30 ஆம் தேதி சனிக்கிழமை நடக்க இருந்த 2 ஆம் பருவத் தோ்வு ஒரு நாள் முன்பாக 29-ஆம் தேதி மதியம் நடத்தப்படும்.