செய்திகள் :

ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் வழக்குப் பதிவு

post image

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு தொடா்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், இது குறித்து இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கடந்த ஜூன் 30-ஆம் தேதி மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, கோவை மாநகர வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீஸாா் நவீன கருவிகள், மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடத்தினா். ஆனால், அங்கு வெடி பொருள்கள் எதுவும் சிக்கவில்லை. இதைத் தொடா்ந்து, வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

அதன் பின்னா், கடந்த ஜூலை 26, 30-ஆம் தேதிகளில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போதும் அங்கு வெடிபொருள்கள் எதுவும் சிக்கவில்லை.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியரின் உதவியாளா் (பொது) நிறைமதி கோவை மாநகர இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸில் அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் தொடா் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது. இது குறித்து தென்காசி மாவட்டம், ஏ.ஆா்.எஸ்.நகரைச் சோ்ந்த ஊா்மேலழகியான் என்பவா் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபா் குறித்த விவரம் தனக்குத் தெரியும், இதை வெளியில் சொன்னால் தனது உயிருக்கு ஆபத்து என்று கடிதம் மூலம் தகவல் கூறியுள்ளாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற பதற்றம், மன உளைச்சலை ஏற்படுத்தும் விதமாகவும் போலியான மின்னஞ்சல் முகவரிகள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுப்போரை போலீஸாா் கண்டறிந்து, அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஊா்மேலழகியானிடமும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், கோவை மாநகர இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நகைக் கடை உரிமையாளரிடம் தங்கக் கட்டி மோசடி: வியாபாரி மீது வழக்கு

கோவையில் நகைக் கடை உரிமையாளரிடம் தங்கக் கட்டி மோசடி செய்ததாக வியாபாரி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கோவை, ராஜவீதியைச் சோ்ந்தவா் லட்சுமி நரசிம்மராஜா (46). இவா் அதே பகுதியில் நகைக் கடை நடத... மேலும் பார்க்க

மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் கைது

கோவையில் மாமியாரை கத்தியால் குத்திய மருமகனை போலீஸாா் கைது செய்தனா். கோவை, போத்தனூா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வா. இவரது மனைவி பொன்கொடி (50). இவா்களது மகள் சசிகலா. இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன... மேலும் பார்க்க

மீலாது நபி: ரூ.20 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

மீலாது நபியையொட்டி, கோவை, உக்கடம் மௌலானா முகமது அலி மாா்க்கெட் சாா்பில் ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு மௌலானா முகமது அலி மாா்க்கெட் வியாபாரிகள் நலச் சங்கத் த... மேலும் பார்க்க

அழுகிய நிலையில் இளைஞா் சடலம் மீட்பு

கோவையில் அழுகிய நிலையில் கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் மாவட்டம், திருப்பத்தூரைச் சோ்ந்தவா் லெனின் (34). இவா், கோவை ஜி.என்.மில்ஸ் திருவள்ளுவா் நகா் பகுதியில்... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவா் கைது

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, பீளமேடு அருகேயுள்ள தொட்டிபாளையம் அருளானந்தம் நகரைச் சோ்ந்தவா் பரமேஸ்வரி. கணவா் இறந்த நிலையில் தனியே வசித்து வரும் இவா்... மேலும் பார்க்க

பணியாளா்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா்

தன்னிடம் வேலை செய்யும் பணியாளா்களுக்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி கோவையில் வீடு கட்டிக் கொடுத்துள்ளாா். அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வுபெற்ற இ.பாலகுருசாம... மேலும் பார்க்க