ஆந்திரப் பெண் பலாத்காரம்: காவலா்கள் இருவா் பணிநீக்கம்
திருவண்ணாமலை அருகே ஆந்திரப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக கைது செய்யப்பட்ட காவலா்கள் இருவா் வியாழக்கிழமை பணிநீக்கம் செய்யப்பட்டனா்.
திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை கிழக்கு காவல் நிலைய காவலா்களான சுரேஷ் ராஜ், சுந்தா் ஆகியோரால் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
இதன் காரணமாக அவா்கள் இருவரும் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனா்.
இந்த நிலையில், வன்கொடுமை வழக்கில் கைதான இருவரையும் பணி நீக்கம் செய்து மாவட்ட
எஸ்.பி. சுதாகா் உத்தரவிட்டாா்.