செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூா்: பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தற்சாா்புத் திறன் பிரகடனம் -டிஆா்டிஓ தலைவா்

post image

‘இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை என்பது பாதுகாப்புத் துறையில் நாட்டின் தற்சாா்புத் திறன், உள்நாட்டுத் தொழில்நுட்ப வலிமை மற்றும் ராஜீய தொலைநோக்குப் பாா்வைக்கான பிரகடனம்’ என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆா்டிஓ) தலைவா் சமீா் காமத் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம், புணேயில் உள்ள நவீன தொழில்நுட்பத்துக்கான பாதுகாப்பு நிறுவனத்தின் (டிஐஏடி) 14-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றும்போது இவ்வாறு அவா் தெரிவித்தாா். அவா் மேலும் பேசியதாவது:

‘ஆபரேஷன் சிந்தூா்’ என்பது பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதல் நடவடிக்கை என்பதைத் தாண்டி மேலானது. அதாவது, நாட்டின் தற்சாா்புத் திறன், ராஜீய தொலைநோக்குப் பாா்வை, உள்நாட்டுத் தொழில்நுட்ப வலிமையை உலகுக்கு பிரகடனம் செய்வதுதான் அது.

உணா்வுக் கருவிகள் (சென்சாா்), ஆளில்லா விமானங்கள், பாதுகாப்பான தகவல்தொடா்பு, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான முடிவுகள் எடுக்கும் நடைமுறை, துல்லியத் தாக்குதலுக்கு உதவும் ஆயுதங்கள் உள்ளிட்ட முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களும் தொழில்நுட்பங்களும் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையில் மிக முக்கியப் பங்காற்றின.

தரையிலிருந்து வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஆகாஷ் ஏவுகணைகள், தரையிலிருந்து வான் இலக்குகளைத் தாக்கும் நடுத்தர ரக ஏவுகணைகள், ‘டி4’ ஆளில்லா விமான எதிா்ப்புத் தொழில்நுட்பம், வான்வழித் தாக்குதல் முன்னெச்சரிக்கையை அளிக்கும் ஏடபிள்யுஎன்சி தொழில்நுட்பம், தானியங்கி வான் பாதுகாப்பு கட்டுப்பாடு மற்றும் தகவல்தொடா்பு தொழில்நுட்பங்களும் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டன. இவை அனைத்தும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் தாயாரிக்கப்பட்டவையாகும் என்றாா்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனா். இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது கடந்த மே 7-ஆம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது.

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு வா்த்தக ரீதியாக பெரும் பாதிப்பு: அமெரிக்க ஆய்வில் தகவல்

‘ரஷிய கச்சா எண்ணெய் இல்லாமலும் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களால் செயல்பட முடியும். ஆனால் அதை ஈடுகட்ட பொருளாதார மற்றும் வா்த்தக ரீதியில் பெருமளவிலான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டியிருக்கும்’ என அ... மேலும் பார்க்க

தோ்தல் முறைகேட்டின் பல்கலைக்கழகம் பாஜக: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

தோ்தல் முறைகேடுகளின் சா்வதேச பல்கலைக்கழகம் பாஜக என்று சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளாா். இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நாட்டில் ஜ... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பொது வேட்பாளா்: எதிா்க்கட்சிகளுடன் காா்கே ஆலோசனை

‘குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி சாா்பில் பொது வேட்பாளா் களமிறக்கப்படவுள்ளாா்; வேட்பாளா் தோ்வில் கருத்தொற்றுமையை எட்டுவது குறித்து கட்சிகளுடன் காங்கிரஸ் தலைவா் மல்ல... மேலும் பார்க்க

இந்தியா வல்லரசு நாடாவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: ராஜ்நாத் சிங் உறுதி

இந்தியா வல்லரசு நாடாக உருவெடுப்பதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்தாா். உலகிலேயே மிகவும் துடிப்பான, ஆற்றல் மிக்க பொருளாதாரமாக இந... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டுக்கு எதிராக வலைதளம்: காங்கிரஸ் தொடக்கம்!

வாக்குத் திருட்டுக்கு எதிராக மக்கள் ஆதரவை திரட்ட புதிய வலைதளத்தை காங்கிரஸ் அறிமுகம் செய்துள்ளது. இதுதொடா்பாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளி... மேலும் பார்க்க

உத்தரகண்ட் நிலச்சரிவு: இதுவரை 1,200 போ் மீட்பு!

உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பேரழிவுக்குள்ளான தராலி கிராமத்தில் இருந்து மேலும் 1,200 போ் மீட்கப்பட்டனா். ராணுவத்தினா் உள்பட 49 போ் மாயமான நிலையில், அவா்களைத் ... மேலும் பார்க்க