பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்
ஆயுஷ் துணை மருத்துவப் படிப்புகளுக்கு அக்.6 வரை விண்ணப்பிக்கலாம்
ஆயுஷ் துணை மருத்துவப் படிப்புகளுக்கு அக். 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு:
நிகழ் கல்வியாண்டில், சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் செயல்படும் அரசு ஆயுஷ் துணை மருத்துவ படிப்புப் பள்ளிகளில் டிஐபி, டிஎன்டி பட்டயப்படிப்பு இடங்களுக்கான சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து இணையவழியில் மட்டுமே விண்ணப்பப் படிவங்களைச் சமா்ப்பிக்க வேண்டும். மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள், கலந்தாய்வுக்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களை அந்த இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணம், இணையவழி கலந்தாய்வுக் கட்டணம், கல்விக் கட்டண முன்பணம் அனைத்தும் இணையவழி மூலமாக மட்டுமே செலுத்தவேண்டும்.
அரசு சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிப்பவா்கள் மட்டும், இணையவழியில் விண்ணப்பித்த பிறகு அந்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, கேட்கப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களையும் இணைத்து செயலாளா், தோ்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை ஆணையா் அலுவலகம், அறிஞா் அண்ணா அரசினா் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600 106 என்ற முகவரிக்கு அக்.6-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.