தொழிற்சங்கம் தொடங்கிய விமான நிலைய ஒப்பந்த தொழிலாளா்கள் பணி நீக்கம்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா
ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோட்டை ரோட்டரி சங்கம் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மேம்படுத்தப்பட்ட இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழாவுக்கு வட்டார மருத்துவ அலுவலா் சுஷ்ருதா தலைமை வகித்தாா்.
ஆரணி கோட்டை ரோட்டரி சங்கத் தலைவா் பா.கோகுல்ராஜ் வரவேற்றாா். பொருளாளா் த.பாபு, சங்க பயிற்றுநா் வி.தியாகராஜன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் 25 தாய்மாா்களுக்கும், பச்சிளம் குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து பொருள்கள் மற்றும் உடை பராமரிப்புப் பொருள்கள் வழங்கப்பட்டன (படம்).