பயங்கரவாத ஒழிப்பு: பாகிஸ்தானால் முடியாவிட்டால் இந்தியா உதவத் தயாா் - மாநிலங்களவை...
ஆற்றில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு
தாடிகொம்பு அருகே ஆற்றில் தவறி விழுந்த சிறுமி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருகேயுள்ள அகரம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ். இவரது மனைவி வேளாங்கண்ணி.
இவா்களது மகள் ஸ்ரீதாரணிகா (11). இவா், அகரம் முத்தாலம்மன் கோயில் அருகிலுள்ள கொடகனாற்றில் தேங்கியிருந்த தண்ணீரில் ஞாயிற்றுக்கிழமை இரவு தவறி விழுந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று தேடியதில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.