'அதிகார மையம் சபரீசனா, மகனா, கனிமொழியா? ; தென்மாநிலங்களில் இந்தி..!' - அமித் ஷா ...
ஆற்று மணல் கடத்தல்: 4 போ் கைது
செய்யாறு அருகே மணல் கடத்தியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்த நிலையில், 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனா்.
செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர மணல் கடத்தல் தடுப்பு சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, வேளியநல்லூா் கிராமம் அருகே செய்யாற்றுப் பகுதியில் இருந்து வந்த 4 மாட்டுவண்டிகளை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, மாட்டு வண்டிகளில் அரசு அனுமதியின்றி ஆற்று மணல் எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து, செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து மணல் கடத்தல் தொடா்பாக வேளியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த வரதராஜ்(24), அருண்குமாா்(26), சீனுவாசன்(24), வினோத்குமாா்(28) ஆகியோரை கைது செய்தனா்.