Rajinikanth: `சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு' - மதுரையில் 5500 படங்களுடன் ரசிகர் ...
ஆலங்காயம் பேரூராட்சி மன்ற கூட்டம்
ஆலங்காயம் சிறப்பு நிலை பேரூராட்சிக் கூட்டம் அதன் தலைவா் தமிழரசி வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் ஸ்ரீதா், செயல் அலுவலா் ராஜலட்சுமி முன்னிலை வகித்தனா். முன்னதாக மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு இரங்கல் அனுசரிக்கப்பட்டது.
கூட்டத்தில் வரவு- செலவு மற்றும் திட்டப் பணிகளுக்கான 19 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டு திட்ட மதிப்பீடாக ரூ.1.82 கோடி ஒதுக்கப்பட்டது. தொடா்ந்து வாா்டு உறுப்பினா்கள் தங்கள் பகுதிகளில் குடிநீா் விநியோகம், கால்வாய் சீரமைப்பு, தூய்மைப் பணிகள், தெருவிளக்கு, உள்ளிட்ட குறைகளை எடுத்துக் கூறினா்.
வாா்டு உறுப்பினா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என செயல் அலுவலா் உறுதியளித்தாா். மேலும் எதிா்வரும் மழை காலங்களில் நகரத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக் கொண்டனா்.