ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான பேரணி: ஆஸி. அரசு கண்டனம்!
ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான பேரணிக்கு அந்நாட்டு அரசு கடும் கண்டனம் தெரிவித்து இந்தியர்களுக்கு ஆதரவாக அறிக்கை வெலியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் இடம்பெயர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் பல நகரங்களிலும் நடைபெற்ற பேரணி மற்றும் போராட்ட நிகழ்வுகளுக்கு அந்நாட்டு பிரதமர் ஆன்டனி ஆல்பனீஸ் தலைமையிலான அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன், கேன்பெர்ரா, அடிலெய்ட், பெர்த், ஹோபர்ட் மற்றும் பிற இடங்களில் ‘ஆஸ்திரேலியாவுக்காக பேரணி’ என்னும் பெயரில் இந்தியர்களுக்கு எதிரான பிரசரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய வெறுப்புணர்வு போராட்டங்களை ‘தீவிர வலதுசாரி செயல்பாடு’ என்று விமர்சித்துள்ள ஆஸ்திரேலிய அரசு, இனவெறி மற்றும் தங்கள் நாட்டு கலாசாரம் மட்டுமே முக்கியம் என்ற எண்ணத்தில் அடிப்படையில் வெடித்துள்ள இந்த போராட்டங்களுக்கு இங்கு இடமில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் மக்களுக்கு இடமில்லை என்றும், பல்வித கலாசாரம் ஆஸ்திரேலியாவின் தேசிய அடையாளத்தின் ஒருங்கிணைந்த மற்றும் முக்கியமான பகுதியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.