செய்திகள் :

இது தனிப்பட்ட பிரச்னை கிடையாது; ரபாடா விவகாரத்தில் முன்னாள் ஆஸி. கேப்டன் காட்டம்!

post image

ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் ககிசோ ரபாடாவுக்கு கிரிக்கெட் விளையாட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெயின் பேசியுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ககிசோ ரபாடா நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்று முதல் இரண்டு போட்டிகளில் விளையாடினார். அதன் பின், தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்புவதாகக் கூறி தாயகம் திரும்பினார்.

இதையும் படிக்க: வன்ஷ் பேடிக்குப் பதிலாக சிஎஸ்கேவில் இணையும் விக்கெட் கீப்பர்!

இந்த நிலையில், அண்மையில் ஊக்கமருந்து பயன்படுத்தியதால் தனக்கு கிரிக்கெட் விளையாட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி கிரிக்கெட் உலகுக்கு அதிர்ச்சியளித்தார் ரபாடா. மேலும், தனது செயலுக்காக வருந்துவதாகவும் தெரிவித்தார்.

தனிப்பட்ட பிரச்னை கிடையாது

ககிசோ ரபாடா ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை எனவும், இது தொடர்பான முழு விவரங்களையும் வெளியிட வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெயின் தாக்கிப் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

டிம் பெயின் (கோப்புப் படம்)

இந்த விவகாரம் தொடர்பாக அவர் பேசியதாவது: இது மிகவும் கேவலமானது. தனிப்பட்ட காரணங்கள் எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு விஷயத்தை மறைப்பதற்காக முயற்சி செய்வது தனிப்பட்ட பிரச்னை கிடையாது. நீங்கள் ஒரு விளையாட்டு வீரராக இருக்கிறீர்கள். ஒரு தொடரின்போது, ஊக்கமருந்து விவகாரத்தில் உங்களுக்கு தடை விதிக்கப்பட்டால், அதனை தனிப்பட்ட பிரச்னை எனக் கூற மாட்டேன். நீங்கள் உங்களது ஒப்பந்தத்தை மீறியுள்ளீர்கள் என்றே கூறுவேன். இது தனிப்பட்ட பிரச்னை கிடையாது.

இதையும் படிக்க: ஜோஷ் இங்லிஷை 3-வது வீரராக களமிறக்கியது யாருடைய முடிவு? ரகசியம் பகிர்ந்த ரிக்கி பாண்டிங்!

ஊக்கமருந்து எடுத்துக் கொண்டதால் தடை விதிக்கப்பட்டது என்றால், அவர் என்ன மாதிரியான ஊக்கமருந்து எடுத்துக் கொண்டார். எப்போது அவருக்கு தடை விதிக்கப்பட்டது, அவருக்கு எவ்வாறு ஊக்கமருந்து கிடைத்தது, ஊக்கமருந்து வழங்கியவர்கள் மீதான நடவடிக்கை என்ன என்பதில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்றார்.

கடந்த ஜனவரி மாதத்தில் தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரின்போது, ரபாடா ஊக்கமருந்து எடுத்துக் கொண்டதாகவும், இடைக்காலத் தடை நிறைவடைந்ததால் அவர் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடலாம் எனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி தரவரிசை வெளியீடு: ஒருநாள், டி20-களில் இந்தியா ஆதிக்கம்; டெஸ்ட்டில் சறுக்கல்!

ஐசிசி ஆடவர் அணிகளுக்கான தரவரிசையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி முதலிடத்தை தக்கவைத்து அசத்தியுள்ளது.ஐசிசியின் ஆடவர் அணிகளுக்கான தரவரிசையினை ஐசிசி இன்று (மே 5) வெளியிட்டது. அதில், ஒருநா... மேலும் பார்க்க

23 வயது நடிகையின் புகைப்பட சர்ச்சைக்கு விராட் கோலி விளக்கம்!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இளம் நடிகை அவ்னீத் கௌர் புகைப்பட சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார். சமூக ஊடகத்தில் நேற்று (மே.2) விராட் கோலி அவ்னீத் கௌரின் ஃபேன் பேஜில் (ரசிகர்களின் பக்கத்தில்) ந... மேலும் பார்க்க

ஐபிஎல்லில் புதிய சாதனை! ஜோஸ் பட்லர் அசத்தல்!

நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஜோஸ் பட்லர் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் நடைபெற்றுவரும் இன்றையப் போட்டியில் குஜராத் டைட்டன் ... மேலும் பார்க்க

மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் திருநங்கைகளுக்கு தடை! - இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் திருநங்கைகள் விளையாடுவதற்கு உடனடி தடை விதிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.கால்பந்து அசோசியேசன் பெண்களுக்கான விளையாட்டுப் போ... மேலும் பார்க்க

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி இன்று (மே 2) அறிவிக்கப்பட்டுள்ளது.ஜிம்பாப்வே அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இட... மேலும் பார்க்க

2026 மகளிர் டி20 உலகக் கோப்பை: லார்ட்ஸ் திடலில் இறுதிப்போட்டி!

2026 ஆம் ஆண்டுக்கான டி20 மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி லண்டனில் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 5 ஆம் தேதி நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. 12 அணிகள் பங்கேற்கும் இந்... மேலும் பார்க்க