செய்திகள் :

"இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிய ஒரே அரசு தமிழ்நாடு" - மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

post image

இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசுதான் என பெருமிதத்துடன் கூறியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இதுகுறித்த அவரது எக்ஸ் தள பதிவில், "இந்தியாவிலேயே அதிகபட்சமாக 9.69% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம் என்று கூறி வந்தோம் அல்லவா…அதையும் தாண்டி, தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் வெளியாகியுள்ளது!

சா‘தீ’க்குள் தென்மாவட்டங்கள்... தொடரும் அரிவாள் அவமானங்கள்! - என்ன செய்கிறது அரசு?

இதற்கு முன்பு, இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டது 2010-11-ஆம் ஆண்டில். அப்போது கலைஞர் ஆட்சி! இப்போது கலைஞர் வழி நடக்கும் திராவிட மாடல் ஆட்சி! இரண்டுமே கழக ஆட்சி! 2030-ஆம் ஆண்டுக்குள் 'OneTrillionDollar' பொருளாதாரம் என்றபோது பலரது புருவமும் உயர்ந்தது.

'இது மிக உயர்ந்த இலக்கு, எப்படி சாத்தியமாகும்?' என்றார்கள்! இதே வேகத்தில் சென்றால், எதுவும் சாத்தியம் என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது!

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின் (குறள் 666)" என்று தெரிவித்திருக்கிறார்.

ஸ்டாலின் - தங்கம் தென்னரசு
ஸ்டாலின் - தங்கம் தென்னரசு

இதுகுறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, "நம்முடையை சாதனையை நாம்தான் முறியடிக்க முடியும் என்ற வகையில், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளில் மற்றொரு மணிமகுடத்தில் பொறிக்கப்பட்ட வைரக் கல் இது" என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

"Legal Opinion கேட்டிருக்கிறோம்; பார்ப்போம்!" - கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஸ்டாலின் சொன்னதென்ன?

ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசியலில் தொடர்ந்து வலுத்துவரும் சூழலில், தமிழக முதல்வரை சந்தித்திருக்கிறார்கள் தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள். இந்த திடீர் சந்தி... மேலும் பார்க்க

Bihar: "என் அப்பாதான் ஆணவப்படுகொலை செய்தார்; என் மடியிலேயே உயிரைவிட்டான் என் காதலன்"-கதறி அழும் பெண்

தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவெங்கும் தினமும் சாதிய ஆணவப்படுகொலைகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. நெல்லையில் கவின் ஆணவப்படுகொலை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 6) அதே நெல... மேலும் பார்க்க

NTK: `பனை, மாடு மேய்ச்சல், மரம், தண்ணீர், மலை மாநாடுகள்.!' - கைகொடுக்கிறதா சீமானின் புது ரூட்?

‘ஒரணியில் தமிழ்நாடு’, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என தி.மு.க, அ.தி.மு.க தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கும் சூழலில், மாடு மாநாடு, தண்ணீர் மாநாடு என புது வழி எடுக்கிறது நாம் தமிழர் கட்சி... மேலும் பார்க்க

50 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்த தபால் சேவை நிறுத்தம்; தபால் பெட்டிகளுக்கு விடைகொடுப்போம்!

டிஜிட்டல் யுகம் நாளுக்கு நாள் அசுர வளர்ச்சியடைந்து வரும் இந்த காலத்தில் எல்லாமே வேகம் அதிவேகம்தான். காத்திருப்பு என்ற வார்த்தைக்கூட பயன்பாட்டில்லை, கால வேகத்தில் காலாவதியாகிவிட்டது. இங்கிலாந்தில், லோங... மேலும் பார்க்க

``ரூ.22 கோடியில் கௌசிகா நதி புனரமைப்பு; 3000 ஏக்கர் விளைநிலம் பயன்பெறும்'' - தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்டம் நீர்வளத்துறை வைப்பாறு வடிநிலக்கோட்டத்தின் கீழ் ரூ.22 கோடி மதிப்பீட்டில் விருதுநகர் கெளசிகா நதியை புனரமைக்கும் நவீனமயமாக்கல் பணி மற்றும் வரத்துக்கால்வாய்களை தூர்வாரும் பணியை மாவட்ட ... மேலும் பார்க்க

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்து 50 ஆண்டுகளாக கிடைக்காத இழப்பீடு - போராட்டம் தீவிரம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக 1981-ம் ஆண்டு 960 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாகியும் தற்போது வரை நிலம் கொடுத்த மக்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. இதற்கு எதிராக ந... மேலும் பார்க்க