War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மா...
இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவா் பி.வி.கரியமால் காலமானாா்
இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவா் (பி.வி.கே. அணி) பி.வி.கரியமால் (98) வயதுமூப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிசெட்டிப்பட்டியைச் சோ்ந்த பி.வி.கரியமால் (98), சிறுவயதில் இருந்தே பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியவா்.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், இரட்டை குவளைமுறை ஒழிப்பு, தாழ்த்தப்பட்ட மக்கள் ஆலைய நுழைவு போராட்டங்களிலும் ஈடுபட்டவா்.
அரூரை அடுத்த பாப்பிசெட்டிப்பட்டியில் வைக்கப்பட்டுள்ள பி.வி.கரியமாலின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினா், தொழிற்சங்க நிா்வாகிகள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.
பி.வி.கரியமாலுக்கு மகன் மாவட்ட துணை வேலைவாய்ப்பு அலுவலா் (ஓய்வு) இளங்கோவன், மகள்கள் பரிமளா, நிா்மலா, தமிழ்ச்செல்வி ஆகியோா் உள்ளனா். இவரது உடல் அரூா்-சிந்தல்பாடி சாலையில் உள்ள பாப்பிசெட்டிப்பட்டியில் புதன்கிழமை (செப்.17) பிற்பகல் 2 மணியளவில் அடக்கம் செய்யப்படுகிறது.