செய்திகள் :

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

post image

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், வெப்தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் வெளியான பரமசிவன் பாத்திமா திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நாளை(ஜூலை 4) வெளியாகிறது.

நடிகர்கள் சத்யராஜ், காளி வெங்கட் கூட்டணியில் உருவான மெட்ராஸ் மேட்னி திரைப்படம் சன் நெக்ஸ்ட், அமேசான் பிரைம் ஓடிடி தளங்களில் நாளை வெளியாகிறது.

ரேவதி இயக்கத்தில் பிரியாமணி நடித்துள்ள குட் வைஃப் இணையத் தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான நகைச்சுவை திரைப்படமான உப்பு காப்புரம்பு, அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகியுள்ளது.

ஹிந்தி மொழிப்படமான காலிதார் லாபதா படத்தை ஜீ 5 ஓடிடி தளத்தில் காணலாம்.

இப்படங்கள் அல்லாமல் கடந்த வாரம் வெளியான ரெய்டு - 2 படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் ஆசாதி, தி வெர்டிக்ட் திரைப்படங்கள் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும் காணக் கிடைக்கின்றன.

You can see which movies and web series are releasing this week on OTT platforms.

இதையும் படிக்க: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் 10 படங்கள்!

இந்தியாவில் ஹாக்கி போட்டிகள்: பாகிஸ்தானுக்கு மத்திய அரசு அனுமதி

இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி, ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் அணிகளுக்குத் தடை விதிக்கப்படாது என மத்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்தது. பல்வேறு நாடுகள் பங்க... மேலும் பார்க்க

உலகக் கோப்பை குத்துச்சண்டை: இந்தியாவுக்கு பதக்கம் உறுதி

கஜகஸ்தான் தலைநகா் அஸ்டானாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ஹிதேஷ் குலியா, சாக்ஷி ஆகியோா் அரையிறுதிக்கு தகுதி பெற்று பதக்கத்தை உறுதி செய்துள்ளனா். பாக்ஸிங் வோ்ல்ட... மேலும் பார்க்க

சங்கா், ஷ்ரியன்ஷி வெற்றி

கனடா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சங்கா் முத்துசாமி, ஷ்ரியன்ஷி வலிஷெட்டி ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா். ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில், சங்கா் முத்துசாமி 23-21, 21-12 என்ற கேம்களில்,... மேலும் பார்க்க

மாநில சீனியா் வாலிபால்: அரையிறுதியில் எஸ்ஆா்எம், ஐஓபி அணிகள்

தமிழ்நாடு மாநில சீனியா் ஆடவா், மகளிா் வாலிபால் சாம்பியன்ஷிப்போட்டியில் மகளிா் பிரிவில் எஸ்ஆா்எம் ஐஎஸ்டியும், ஆடவா் பிரிவில் ஐஓபியும் தகுதி பெற்றுள்ளன. தமிழ்நாடு வாலிபால் சங்கம், சென்னை மாவட்ட சங்கம் ச... மேலும் பார்க்க

அல்கராஸ், ஜோகோவிச் முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா். ஆடவா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்க... மேலும் பார்க்க